ஈரோடு தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்? - டிடிவி தினகரன் ஆலோசனை

By Velmurugan sFirst Published Feb 3, 2023, 4:28 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் அதனை கண்டிப்பாக ஆதரிப்போம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற பாஜகவின் நிலைப்பாடு நல்ல முயற்சி.

திமுகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் அதனை கண்டிப்பாக ஆதரிப்போம். அதிமுக ஒன்றிணையக் கூடாது என்பதில் பழனிசாமி தீக்கமாக உள்ளார். எங்ளது வேட்பாளர் படித்த இளைஞர், உள்ளூரைச் சேர்ந்தவர். நாங்கள் கடந்த முறை தேர்தலை சந்தித்ததை காட்டிலும் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

இடைத்தேர்தலில் 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி; அன்பில் மகேஸ் நம்பிக்கை

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற பணியில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்த வந்தால் அவருடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் 8 ஆயிரம் ரூபாய் கொடுக்க தயாராக உள்ளது. 

தருமபுரியில் மாயமான பள்ளி மாணவின் உடல் எலும்பு கூடுகளாக மீட்பு

திமுக திருந்திவிட்டது என்ற நம்பிக்கையில் மக்கள் அவர்களிடம் ஆட்சியை கொடுத்தார்கள். ஆனால் 60 மாதங்களில் அனுபவிக்க வேண்டிய பிரச்சினைகளை 20 மாதங்களிலேயே சந்தித்துவிட்டனர். 20 மாதங்களில் திமுக செய்த செயல்களை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்போம் என்றார்.

click me!