அதிமுக பொதுக்குழு வழக்கு.. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!

Published : Sep 03, 2022, 11:14 AM ISTUpdated : Sep 03, 2022, 11:31 AM IST
அதிமுக பொதுக்குழு வழக்கு.. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!

சுருக்கம்

தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளித்தனர்.

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க;- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட முடியுமா..? செக் வைத்த இபிஎஸ்...!

இந்த வழக்கை துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகாமல் பொதுக்குழுவை கூட்டியது எப்படி செல்லும்? தீர்ப்பின் முழு விவரம் வெளியானதுடன் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். 

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் மேல்முறையீடும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க;-  நீதிமன்றம் தீர்ப்பு இறுதியானது இல்லை.. டுவிஸ்ட் வைத்து புதிய தகவலை கூறிய கோவை செல்வராஜ்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி