கையில கும்பம், கழுத்துல மாலை.. ஆன்மீகம் ததும்ப அமைச்சர் கீதா ஜீவன்.. திராவிட மாடலுக்கு சோதனை..?

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2022, 9:43 AM IST
Highlights

கையில் கும்பம் கழுத்தில் மாலையுடன் அமைச்சர் கீதா ஜீவன் ஆன்மீகம் ததும்ப கோவிலை சுற்றி வரும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. என்னடா இது திராவிட மாடலுக்கு வந்த சோதனை என புகைப்படத்தைப் பார்க்கும் பலரும் பலவகையில் விமர்சித்து வருகின்றனர்.

கையில் கும்பம் கழுத்தில் மாலையுடன் அமைச்சர் கீதா ஜீவன் ஆன்மீகம் ததும்ப கோவிலை சுற்றி வரும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. என்னடா இது திராவிட மாடலுக்கு வந்த சோதனை என புகைப்படத்தைப் பார்க்கும் பலரும் பலவகையில் விமர்சித்து வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது, திமுக அரசின் ஒவ்வொரு முயற்சியையும் பாஜக சித்தாந்த ரீதியாக மிக கடுமையாக விமர்சித்து வருகிறது, இந்நிலையில்தான் திராவிட மாடல் என்ற முழக்கத்தை திமுக தலைவர் ஸ்டாலின் மேடைதோறும் முழங்கி வருகிறார், திராவிட மாடல் என்பது பெரியாரிய சித்தாந்தம், பெண் விடுதலை, சாதியற்ற சமூகம், மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்பதே திரை மழை பொருள்.

இதை சில நேரங்களில் ஸ்டாலின் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜை புனஸ்காரம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார், 

பின்னர் அது சர்ச்சையானது. இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்று கூறி வந்தாலும் இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறுவதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தவித்து வருகிறார், இது திராவிட மாடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது. கட்சித் தலைமை இப்படி இருக்க, மறுபுறம் அக்காட்சியின் அமைச்சர்களோ கோவில், குளம், பூஜை புனஸ்காரங்கள் என தீவிரம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது.

இதையும் படியுங்கள்: திமுகவின் மா.செவாகும் அதிமுக மாஜி அமைச்சர்.. 4 மாவட்ட செயலாளருக்கு ஆப்பு.. ஸ்டாலின் கையில் புதிய லிஸ்ட் ..

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போன்றோரே இதற்கு உதாரணமாக கூறலாம், இந்த வரிசையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனும் இணைந்துள்ளார். அதாவது சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது அதற்கு முதல்வர் வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை என அண்ணாமலை கடிந்துகொண்டார், இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனும் அவரது சகோதரரும், தூத்துக்குடி மேயருமான ஜெகன், கோவில் கும்பாபிஷேக விழாவில் கையில் கலசம் எடுத்து கோவில் பூசையில் கலந்து கொண்டுள்ளனர். அதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒருபுறம் தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் பேசி வரும் நிலையில் மறுபுறம் அக்காவும் தம்பியும்  ஆன்மீகத்தின் பக்கம் வந்து விட்டார்களே? என பலரும் இப்படத்தை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜகவினர் இந்த புகைப்படத்தை திராவிட மாடலுக்கு எதிரான ஆயுதமாக  சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. இனி ரேஷன் கடையிலும் சிலிண்டர் வாங்கலாம்..!

இது குறித்து விளக்கம் அளித்துள்ள கீதாஜீவன் ஆதரவாளர்கள் தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தர்மகர்த்தாவாக இருந்து வந்தார், தற்போது அவர் இல்லாததால் அவர்களின் வாரிசுகள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். திராவிட மாடலின் நோக்கம் மதத்திற்கு எதிரானது அல்ல, எந்த மதத்தினரையும் புண்படுத்தாமல் இருப்பது தான் என்று விளக்கம் கொடுத்துள்ளனர். இன்னும் சிலர் இது என்ன வகை திராவிட மாடலோ என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர். 
 

click me!