திமுகவின் மா.செவாகும் அதிமுக மாஜி அமைச்சர்.. 4 மாவட்ட செயலாளருக்கு ஆப்பு.. ஸ்டாலின் கையில் புதிய லிஸ்ட் ..

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2022, 8:56 AM IST
Highlights

அமைச்சர் செந்தில்பாலாஜி போலவே முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தர்மபுரி மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சர் செந்தில்பாலாஜி போலவே முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தர்மபுரி மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக செயல்படாத 4 மாவட்ட  செயலாளர்களின் பதவிகளை பறித்து அந்த இடத்திற்கு புதிய நபர்களை நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே திமுகவின் கட்டமைப்பு வலுப்படுத்த அக்காட்சி  பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அந்த வரிசையில் வழக்கம்போல பேரூர், ஒன்றியம், ஊராட்சி மட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தேர்வு  ஏற்கனவே அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட கீழ்மட்ட பொறுப்புகளுக்கு 95 விழுக்காடு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம், தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர்களும் அக்காட்சியின் நாளேடான முரசொலியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அடிமட்ட பொறுப்புகளில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை, இதில் அங்கொன்றும் இங்கொன்றும் சலசலப்பு ஏற்பட்டாலும் தலைமையின் முடிவு என்பதால் அதை கட்சி தொண்டர்கள் ஏற்று செயல்பட்டு வருகின்றனர்,

இந்நிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்களை அக்காட்சி தலைமை குறி வைத்துள்ளது, குறிப்பாக நெல்லை, தென்காசி, கோவை, தருமபுரி ஆகிய மாவட்ட செயலாளர்களை தூக்கிவிட்டு அங்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க முதலமைச்சர் ஸ்டாலின் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்: செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.. எரிச்சலான செல்லூர் ராஜூ.. அப்படி என்ன கேட்டாங்க தெரியுமா?

இந்த வரிசையில்தான் தர்மபுரி மாவட்ட செயலராக அதிமுக முன்னாள் அமைச்சரும், சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவருமான பழனியப்பனை நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது  திமுகவுக்கு வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே அமைச்சர் பதவி, அதிலும் முக்கிய இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கோவை, கரூரை திமுகவின் கோட்டையாக மாற்றும் பொறுப்பை ஸ்டாலின் வழங்கினார், அதையும் செந்தில் பாலாஜி கடந்த  நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் நிரூபித்து காண்பித்தார்.

சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 50000 பேரை திமுகவில் இணைத்து தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார், செந்தில் பாலாஜியில் பராக்கிரமத்தை ஸ்டாலினே மேடியில் வானளவுக்கு புகழ்ந்தார்.

இதையும் படியுங்கள்: சமமில்லை என்பது சனாதனப் புத்தியின் எச்சம்… அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த திருமாவளவன்!!

எனவே, செந்தில் பாலாஜியை போலவே பழனியப்பனும் அதிமுகவில் செயல் வீரர் என்று பெயர் எடுத்தவர் என்பதால்,  செந்தில் பாலாஜியைப் போலவே அவருக்கும்  மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பழனியப்பனும் தனது பங்குக்கு அதிரடி காட்ட பல திட்டங்களை கைவசம் வைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

அதிலும் பழனியப்பன் தருமபுரியில் மிகவும் பரிச்சயமான முகம் என்பதால் நிச்சயம் தர்மபுரியை  திமுகவின் கோட்டையாக மாற்றுவார் என ஸ்டாலின் வலுவாக நம்புவதே இந்த அதிரடிக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. 
 

click me!