"ஓம் காளி.. ஜெய் காளி.. இந்துக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் ".. ஜாமினில் வந்தவுடன் வேலையை காட்டிய கனல் கண்ணன்

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2022, 11:14 AM IST
Highlights

இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார். வெறுப்பு பேச்சு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார். வெறுப்பு பேச்சு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  இந்து மக்களின் வீரமே வெல்லும் என்றும், இந்துக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

எச். ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றோர் தொடர்ந்து பெரியாருக்கு எதிராக  வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளவர்தான் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், கடந்த மாதம் இந்து முன்னணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கனல்கண்ணன், ஸ்ரீ ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள சிலை எப்போது உடைக்க படுகிறதோ அது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என ஆக்ரோஷமாக பேசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து அவர் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு வழக்கு.. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு? அதிர்ச்சியில் இபிஎஸ்..!

சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகாரை பெற்ற சைபர் கிரைம் போலீசார், கனல்கண்ணன் மீது சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவது சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து கனல்கண்ணன் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், ஆனால் அவர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது, இதனை அடுத்து புதுச்சேரியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்: kailasa: swami nithyananda:ஆபத்தான நிலையில் நித்தியானந்தா ! இலங்கையில் மருத்துவதஞ்சம் கேட்டு கடிதம்

அதைத் தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்,  அப்போதும்கூட தான் பேசியதில் சட்டத்துக்குப் புறம்பானது ஏதுமில்லை என்றும், போலீசார் என்னை கைது செய்துள்ளது துரதிஷ்டவசமானது, ஆனால் கோயில் வாசலில் சிலையை  வைத்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை என கோரியிருந்தார். இதனால் அவரது ஜாமின் மனு இரண்டு முறை மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இனி இதுபோல சர்ச்சை பேச்சு பேச மாட்டேன் என்ற பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததன்  அடிப்படையில் கனல் கண்ணனுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. அவருக்கு இந்து முன்னணி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது, அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சிதான், இனி இந்துக்களாக தொடர்ந்து போராடுவேன், ஓம் காளி... ஜெய் காளி... பாரத் மாதா கி ஜெய் என்ற அவர், தொடர்ந்து இந்து மக்களின் வீரமே வெல்லும் என கனல்கண்ணன் கூறினார். அப்போது பகவான் விஷ்ணு குறித்து சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , பதிலளிக்க விரும்பவில்லை எனக்கூறி கனல்கண்ணன் அங்கிருந்து நழுவிச் சென்றார்.

 

click me!