ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு கடந்த மார்ச் 28ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.
undefined
இதையும் படிங்க;- ஆளுங்கட்சியை சேர்ந்த நகர்மன்றத் தலைவர் அதிமுகவில் இணைகிறார்? என்ன காரணம் தெரியுமா?
அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கட்சியில் இருந்து நீக்கியது தவறு எனத் தெரிவித்த தனி நீதிபதி, இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவில்லை. இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. என்னை நீக்கியது தவறுவென்றால் அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும் என்றும் வாதிட்டார்.
இதையும் படிங்க;- நீதிமன்றம் சொன்னதால தான் நாங்க ஏத்துக்கணும்.. இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்..!
இதனையடுத்து, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என வாதிட்டனர். இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க;- இபிஎஸ்-க்கு அடுத்த நெருக்கடி.. சசிகலாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நீதிமன்றம்..!
இந்நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்ப வழங்கப்படுகிறது. இதனால், தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்ற பயத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருந்து வருகின்றனர்.