“டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடி டீம் எடுத்த அதிரடி முடிவு” - அதிமுகவில் பரபரப்பு

By Raghupati R  |  First Published Sep 21, 2022, 6:36 PM IST

நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமிச்ஷாவை  நேரில் சந்தித்து பேசினர்.


கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு

இந்த சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரை சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும், 2500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்றுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட ஆதரவு கடிதங்களை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது கூடுதல் ஆதாரங்களாக சமர்பிக்கவும் திட்டமிட்டனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமிச்ஷாவை  நேரில் சந்தித்து பேசினர். இந்தநிலையில் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில்  முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..ஆ.ராசா கண்டிக்கவில்லை என்றால் திமுக அதற்குரிய தண்டனையைப் பெறும்: ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை!!

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான உட்கட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்  அடுத்த கட்ட நடவடிக்கையில்  எடப்பாடி பழனிசாமி தரப்பு  இறங்கியுள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..ஓர் ஆண்டில் சாதனைகளும், சர்ச்சைகளும்.. ஆளுநர் ஆர்.என் ரவியின் 1 வருட செயல்பாடு எப்படி?

click me!