திமுக எம்பி ஆர் ராசாவின் பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் திமுகவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
திமுக எம்பி ஆர் ராசாவின் பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் திமுகவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். கடைசி காலத்தில் கலைஞர் கருணாநிதியே ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு எழுதினார் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கி. வீரமணியின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்து மதம் மக்களைப் பிரிக்கிறது, சமூகத்தில் வர்ண பேதம் கற்பிக்கிறது, இந்து மதம் நம்மையெல்லாம் சூத்திரன் என்று சொல்கிறது, நீ இந்து என்றால் சூத்திரன் தான், நீ இந்து என்றால் தீண்டத்தகாதவன் தான் என்கிறது, சூத்திரன் என்றால் வேசியன் பிள்ளைகள் என்று பொருள், அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் வேசியின் பிள்ளைகளாக இருக்க விரும்புகிறார்கள் என பேசினார்.
இதையும் படியுங்கள்: ராமதாஸ் கையில் புது வாட்ச் கட்டிய பன்னீர்.. என்னை மிகவும் கவர்ந்தவர் என தைலாபுரம் டாக்டர் உருக்கம்.
அவரின் இந்தப் பேச்சுக்கு எதிராக பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக எம்.பி ராசாவின் பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, அவரின் சர்ச்சை பேச்சுகளால் சிறுபான்மையினரின் வாக்குகள்கூட அவர்களுக்கு கிடைக்காது, தொடர்ந்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ராஜாவின் ராஜாவின் பேச்சுக்கள் இருந்து வருகிறது. சகோதர சகோதரிகளின் மனதை புண்படுத்தும் வகையில் ராசா பேசி வருகிறார். கடைசி காலத்தில் கருணாநிதி கூட ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை தான் எழுதினார்.
இதையும் படியுங்கள்: நீங்கள் எஸ். சி தானே? ஆ.ராசாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி - வைரல் வீடியோ!
பாஜக ஒருபோதும் சாதி என்பதை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் காட்சி அல்ல, சாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதத்தின் கொள்கை எதுவும் கிடையாது. எங்கோ இருந்து புதுப்புது கருத்துக்களை கொண்டுவந்து தனி தமிழகம் என்ற எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ராசாவுக்கு எதிராக போராடுபவர்கள் மீது தான் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது, கைது செய்யப்படுகிறார்கள். ராசாவுக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தாது,ஆனால் இதுபோன்ற எம்.பி நமக்கு தேவையில்லை என மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் பாஜக நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.