எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 13 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில், அதிமுக மாநில மாநாடு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக 4 பிளவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் சட்டப்போராட்டம் நடத்தினார். ஆனால் அனைத்திலும் ஓபிஎஸ்க்கு பின்னடைவாகவே அமைந்தது. இந்தநிலையில் ஓபிஎஸ்- டிடிவி தினகரனோடு இணைந்து எடப்பாடியை எதிர்க்க தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் தஞ்சையில் இருவரும் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் சசிகலாவையும் தங்கள் பக்கம் இணைந்து எடப்பாடி அணிக்கு டப் கொடுத்த திட்டமிட்டு வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகம் வரும் அமித்ஷா..! இபிஎஸ்க்கு போட்டியாக ஓபிஎஸ் போடும் பிளான்.. பலிக்குமா?
மாநில மாநாடு- ஆலோசனை
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறவுள்ளது. எனவே மாநில மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாகவும், அதிமுகவில் உள்ள மாவட்டங்களில் ஒரு சிலவற்றை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்ட இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்