தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியை மாற்ற திட்டமா.? வெளியான பரபரப்பு தகவல்

By Ajmal KhanFirst Published Jun 9, 2023, 8:45 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும்  10 மாதங்களுக்கும் குறைவான காலம் இருப்பதால் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் பணிகளை ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்கியுள்ளது. பூத் கமிட்டி அமைப்பது, வாக்கு சாவடி முகவர்களை தயார் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதே போல இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜகவை அகற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

எதிர்கட்சிகள் ஒன்றினைந்து பாஜகவை வீழ்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஆலோசனை கூட்டமானது நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பாஜகவிற்கு டப் கொடுக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில தலைவர்களை களப்பணி தீவிரம் காட்ட காங்கிரஸ் கட்சி  அறிவுறுத்தியுள்ளது. மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளது.

மின் கட்டண உயர்வால் சிறு குறு நிறுவனங்கள் மூடியாச்சு..! இப்போ மீண்டும் மின் கட்டண உயர்வா.? அன்புமணி ஆவேசம்

மாநில தலைவர்களை மாற்ற திட்டம்

இந்தநிலையில் தமிழகத்தை பொறுத்த வரை 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநில தலைவராக கேஎஸ் அழகிரி நியமிக்கப்பட்டார். இவர் தலைமையின் கீழ் எதிர்கொண்ட சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியாகவே அமைந்தது. இதனையடுத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி வசமாகியது. இருந்த போதும் உட்கட்சி பிரச்சனையால் எந்த வித முன்னேற்ற நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார். இந்த மாநில சட்டமன்ற தேர்தலில் பெறும் வெற்றியானது அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக அமையும். 

புதிய தலைவர் யார்.?

எனவே இதனை கருத்தில் கொண்டு  பல்வேறு மாநிலங்களில் மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 5 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் கேஎஸ் அழகிரியை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் கார்த்தி சிதம்பரம், திருநாவுகரசர், செல்வப்பெருந்தகை, தங்கபாலு ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தான் திராவிட மாடலா.? திமுக அரசை விளாசும் செல்லூர் ராஜூ
 

click me!