ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை பேட்டியாகக் அண்ணாமலை கொடுத்துள்ளார். இதனால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் மிகப் பெரிய வேதனையையும், மனஉளைச்சலையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. அந்த தீர்மானத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை,
undefined
தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கமா.? விடாப்பிடியாக இருக்கும் அதிமுக- நடக்கப்போவது என்ன.?
அண்ணாமலைக்கு கண்டனம்
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை பேட்டியாகக் கொடுத்துள்ளார். இதனால், தமிழகத்தில் வாழும் தெய்வமாக இருக்கக்கூடிய புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் மிகப் பெரிய வேதனையையும், மனஉளைச்சலையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான திருமிகு வாஜ்பாய், திருமிகு அத்வானி மற்றும் தேசிய அளவிலான பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலரும்
ஜெயலலிதா வீட்டிற்கு வந்த பாஜக தலைவர்கள்
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்கள். தேசிய தலைவருக்கு நிகரான இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, பல தலைவர்கள் அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். சென்னையில் மாண்புமிகு அம்மா அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளையும் நடத்தி இருக்கிறார். தற்போதைய தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு மூலக் காரணமாக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்,
பாஜக வெற்றிக்கு உதவிய அதிமுக
தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்து அறிமுகப்படுத்தி, 1998-ல் முதன்முதலில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையப்பெற, மாண்புமிகு அம்மா அவர்கள் பெரும்பான்மையான கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளிக்கச் செய்ததோடு, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றதற்கும் அரும்பாடுபட்டவர்.அதே போல், 20 ஆண்டு காலமாக தமிழக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த பா.ஜ.க-விற்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொடுத்தவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
உள்நோக்கத்துடன் அண்ணாமலை செயல்படுகிறார்
தமிழ் நாட்டின் முதலமைச்சராக இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 16 ஆண்டுகள் பதவியில் இருந்து, பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். தேசிய அளவில் பல்வேறு திட்டங்களுக்கு முன் உதாரணமாக வழிகாட்டிய மகத்தான தலைவர் ஆவார். தமிழ் நாட்டின் வரலாற்றில் ஆண்ட கட்சியை மீண்டும் ஆட்சியில் அமரவைத்து சாதனை படைத்தவர் இதய தெய்வம் அம்மா அவர்கள்.
இத்தகைய போற்றுதலுக்குரிய இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, பொதுவெளியில் எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்