அமைச்சர் செந்தில் பாலாஜியை சுத்து போடும் அமலாக்கத்துறை! தலைமைச் செயலகத்திலும் சோதனை! இறங்கிய துணை ராணுவம்.!

Published : Jun 13, 2023, 02:21 PM ISTUpdated : Jun 13, 2023, 03:05 PM IST
  அமைச்சர் செந்தில் பாலாஜியை சுத்து போடும் அமலாக்கத்துறை! தலைமைச் செயலகத்திலும் சோதனை! இறங்கிய துணை ராணுவம்.!

சுருக்கம்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரின் சகோதரர் வீடுகள் மற்றும்  உறவினர்கள் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட  கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. 

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அதிவிரைவுப் படை குவிக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரின் சகோதரர் வீடுகள் மற்றும்  உறவினர்கள் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க;- அமலாக்கத்துறை திடீர் சோதனை..! வாக்கிங்கை பாதியில் முடித்து அவசரமாக டாக்சியில் வீடு திரும்பிய செந்தில் பாலாஜி

அதன் அடிப்படையில் சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம்,  கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கதுறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டுள்ளனர். 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் 2 வங்கி அதிகாரிகள் துணையுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன்பு அதிவிரைவுப் படையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்