இன்று தமிழ்நாட்டில் இருக்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு செய்தது பாமக தான். நாங்கள் செய்ததை தமிழ்நாட்டு கட்சிகள் யாராவது செய்து உள்ளனரா என்று சவால் விடுகிறேன். இருகட்சிகளுகும் இடையில் சில பிரச்சனைகள். ஆனால் அதனை திராவிட கட்சிகள் ஊதி பெரிதாக்குகிறது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் மது கிடைக்கிறது. இப்போது இருக்கின்ற அமைச்சர் மது விலக்கிற்கு சரியானவர் அல்ல என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் எதிரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பறையர் சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய அவர்;- தமிழ்நாட்டில் இரு பெரும் சமுதாயங்கள் இருக்கிறது. இன்று கூட அவை ஒரே குடிசையில் தான் இருக்கின்றனர். படிப்பறிவு, வேலைவாய்ப்பு சரி வர இல்லாத சூழல் உள்ளது. திராவிட கட்சிகள் சமூதாயங்களை வாக்கு வங்கிகலாக பயன்படுத்தி வருகிறது. இன்று தமிழ்நாட்டில் இருக்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு செய்தது பாமக தான். நாங்கள் செய்ததை தமிழ்நாட்டு கட்சிகள் யாராவது செய்து உள்ளனரா என்று சவால் விடுகிறேன். இருகட்சிகளுகும் இடையில் சில பிரச்சனைகள். ஆனால் அதனை திராவிட கட்சிகள் ஊதி பெரிதாக்குகிறது. பிரச்சனைகளை உருவாக்கினால் தான் அதில் மீன் பிடிக்கமுடியும் என திராவிட கட்சிகள் இருக்கின்றன.
இதையும் படிங்க;- இருந்தாலும் இவ்வளவு பிடிவாதம் இருக்கக்கூடாது! 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா? ரயில்வேவுக்கு எதிராக அன்புமணி.!
அனைத்து பின் தங்கிய சமூதாயங்களும் ஒன்று சேர வேண்டும். அவர்கள் ஒன்று சேர்ந்து ஆள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் எந்தனை பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 44 தனி தொகுதிகள் உள்ளன அதில் 23 தனி தொகுதிகள் திமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்று உள்ளனர். ஆனால் 3 அமைச்சர்கள் தான் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் 7 அமைச்சர்கள் தரவேண்டும், ஆனால் திராவிட கட்சிகள் தருவதில்லை திமுக மட்டுமில்லை அதிமுக கட்சியும் அப்படித்தான் நடந்துகொள்கிறது என அன்புமணி கூறினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ்;- விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் விற்பனையில் முதலிடம். ஆனால், கல்வியில் கடைசி இடம். அங்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இருக்கிறார் கல்வியில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. செந்தில் பாலாஜி ஏப்ரல் 12ம் தேதி 500 மது கடைகளை மூடுவதாக அறிவித்திருந்தார். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இன்னும் ஒரு கடைகள் கூட மூடப்படவில்லை. தமிழகத்தில் 24 மணி நேரமும் மது கிடைக்கிறது இப்போது இருக்கின்ற அமைச்சர் மது விலக்கிற்கு சரியானவர் அல்ல. அமைச்சர் செந்தில்பாலாஜி மதுவிலக்கு அமைச்சராக இல்லாமல் மது திணிப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார். கார்டு போட்டால் மதுபட்டிகள் கிடைக்கும் இயந்திரங்கள் தற்போது தேவையா? இது நாட்டிற்கு வளர்ச்சியா?
இதையும் படிங்க;- 24 மணி நேரமும் மது விற்பனை.. மதுவில் சயனைடு கலக்கப்பட்டதா? அன்புமணி வெளியிட்ட பகீர் தகவல்
ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று கூறிய முதலமைச்சர் தற்போது அன்றைக்கு வேறு நிலைப்பாடு இன்றைக்கு வேறு நிலைப்பாடு என்று செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்தியாவின் அதிக விதவைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. நுரையீரல் பிரச்சனை மற்றும் தற்கொலை பிரச்சனைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு செயல்பட்டு கொண்டிருக்கிறது இதற்குக் காரணம் மது. தமிழ்நாடு விரைவில் குடிகார நாடு என்று பெயர் மாற்ற நிலைக்குவந்து விட்டோம். 2026-இல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதை இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- 5 மணி நேரத்தில் தயாரிக்க வேண்டிய பட்டியலை 53 நாட்கள் ஆகியும் தயாரிக்க முடியலையா? தமிழக அரசை விளாசும் அன்புமணி