அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான்.. எடப்பாடி பேசினால் நான்..! முடிச்சு போட்ட ஓபிஎஸ் !

By Raghupati R  |  First Published Nov 7, 2022, 10:24 PM IST

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையேயான அதிகார மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதே அதிமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.


ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரின் இரட்டை தலைமை கீழ் இயங்கி சமயத்தில் அதிமுகவால் எந்தவொரு தேர்தலிலும் பெரியளவில் வெல்ல முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் தோல்வி தான்.

எடப்பாடி Vs ஓபிஎஸ்:

Tap to resize

Latest Videos

ஒருபுறம் நிர்வாகிகள் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும், தொண்டர்கள் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வமும் கூறிவருகிறார்கள். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது பேசிய அவர், பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரை எதிர்த்து வாக்களித்து இருந்தேன். திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என வேலுமணி, தங்கமணி என்னிடம் பேசினார்கள்.

இதையும் படிங்க.முடி கொட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்த இளைஞர்.. மருத்துவர் தான் காரணம் - அதிர்ச்சி தகவல்!

அதிமுக கூட்டணி:

அதனால் தான் எடப்பாடிக்கு ஆதரவு அளித்தேன். ஆனால் எனக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. கூவத்தூரில் தான் சசிகலா முதல்வர் பதவி கொடுத்தார். ஆனால் அவருக்கும் நம்பிக்கை துரோகியாக இருந்தவர் தான் எடப்பாடி. நாமக்கலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி சொல்லி இருந்தார். யார் கூட்டணியில் இருப்பார்கள் என்று அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

அதிமுக எதிர்க்கட்சி:

உச்சநீதிமன்ற இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.  விரைவில் மாவட்ட வாரியாக சென்று தொண்டர்களை நான் சந்திப்புது உறுதி. எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்பட்டு வருகிறோம். ஆளுநர் அவர் கடைமைய செய்து கொண்டு இருக்கிறார். ஆளுநர் மீது வைக்கப்டும் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை. அதிமுகவின் சட்டபூர்வமான ஒருங்கிணைப்பாளர் நான் தான். திமுக கவனம் செலுத்தாத நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்து வருகிறேன்.

இதையும் படிங்க.தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. எப்போது தேர்வு தெரியுமா ? முழு விபரம்

எடப்பாடி பழனிசாமிக்கு பதில்:

ஆளுநர் அவரது அதிகாரம் உட்பட்டு தான் செயல்படுகிறார். ஆளுநர் தேவையில்லை என்று சட்டத்தில் எதுவும் கூறவில்லை. ஆளுநர் அதிகாரத்தை மீறினார் என்று நிரூபிக்கவில்லை.  ஆனால் எனக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. அதிமுக அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் வைக்க பேசியபோது எதிர்த்தவர் தான் எடப்பாடி. நான் பேசிய பதிலுக்கு எடப்பாடி பேசினால் மீண்டும் பதில் கூற தயாராக இருக்கிறேன் என்று அதிரடியாக பதிலடி கொடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

இதையும் படிங்க.பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?

click me!