உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு விவகாரம்... உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல... முத்தரசன் கண்டனம்!!

By Narendran SFirst Published Nov 7, 2022, 8:18 PM IST
Highlights

உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 சதவித இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு சரியல்ல. இது அதிர்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க: திமுக ஆட்சியை கண்டித்து நவ.15 மாபெரும் போராட்டம்… அறிவித்தார் அண்ணாமலை!!

ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் பொருளாதார அடிப்படையை மட்டும் அளவுகோளாக கொண்டதும், அது உயர் சாதி பிரிவினருக்கு மட்டுமானதும் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இட ஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: உயர்வகுப்பு இட ஒதுக்கீடு விவகாரம்... உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்... ராமதாஸ் கருத்து!!

இவை பழங்குடி, பட்டியல் இன இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை பறிக்க வழி வகுக்கும்.  இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத காலகட்டத்தில், இட ஒதுக்கீடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. எனவே சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்துள்ளார்.  

click me!