Kodanad case : மீண்டும் சூடுபிடித்த கொடநாடு வழக்கு.. சிக்கலில் இபிஎஸ்.. அடுத்து என்ன ?

By Raghupati R  |  First Published Jun 24, 2022, 2:10 PM IST

Kodanad case : ஒற்றை தலைமை பிரச்னை பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கும் நிலையில், இபிஎஸ்சுக்கு மேலும் தலைவலியை உண்டாக்குவது போல கொடநாடு கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.


அதிமுக

அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையேயான மோதல் போக்கு என்பது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது. அவ்வப்போது விவகாரம் பெரிதாகும்போது மூத்த நிர்வாகிகள் தலையிட்டு தீர்த்து வந்தார்கள். தற்போது வெடித்து ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

Tap to resize

Latest Videos

நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மீண்டும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும். அப்போது ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வெளிநடப்பு செய்தனர். அதனத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனித்தனியாக முகாமிட்டனர். 

இதையும் படிங்க : Agnipath Recruitment 2022: இன்று முதல் 'அக்னிபத்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்கள் இதோ !!

கொடநாடு வழக்கு

ஒற்றை தலைமை பிரச்னை பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கும் நிலையில், இபிஎஸ்சுக்கு மேலும் தலைவலியை உண்டாக்குவது போல கொடநாடு கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்று தகவல் அவ்வப்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.

இதையும் படிங்க : AIADMK GC Meeting Live Updates: ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு.. வாகனம் பஞ்சர்.!

இன்று கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையையொட்டி சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திபு என்பவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : AIADMK : புரட்சி பயணம் ஆரம்பம்.! ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா..நம்ம லிஸ்ட்லயே இல்லையே ?

click me!