‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகளால் சிக்கி திணறும் ‘டொனால்ட் டிரம்ப்’

First Published Oct 16, 2016, 7:59 AM IST
Highlights
 

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது நாளுக்கு நாள் ‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு பதில் கூற முடியாமல் சிக்கி திணறி மறுத்து வருகிறார்.

அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8 ந்தேதி நடக்க உள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், டிரம்ப் கடந்த 2005-ம் ஆண்டு தனிப்பட்ட முறையில் பேசிய ஒரு வீடியோ வெளியானது. அதில்  பெண்கள் குறித்து மிகவும் ஆபாசமாகவும், அவமதிப்பாகவும்  பேசி இருந்தார்.

கண்டனம்

இந்த வீடியோ வெளியானதில் இருந்து டிரம்ப்க்கு நாடுமுழுவதும் பெண்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இதற்கு முன் டிரம்ப்பின் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்களும் அடுத்தடுத்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

5 பெண்கள் புகார்

ஏற்கனவே 5 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் அளித்திருந்த நிலையில் நேற்று புதிதாக 2 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அமெரிக்க தொலைக்காட்சி சேனலில் ‘ தி அப்ரென்டிஸ்’ எனும் தொடரில் நடித்து வந்த நடிகை சம்மர் ஜெர்வோஸ் தன்னிடம் டிரம்ப் கடந்த 2007ம் ஆண்டில் தவறாக நடந்து கொண்டார் என புகார் அளித்துள்ளார்.

நடிகை புகார்

இது குறித்து  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டுக்கு சம்மர் ஜெர்வோஸ் அளித்துள்ள பேட்டியில், “ அமெரிக்க சேனலில் வெளியான ‘தி அப்ரென்டீஸ்’ நாடகத்தில் நடத்தபின்,டிரம்பின் கோல்ப் மைதானத்தில் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தேன். அப்போது பிவெர்லி ஹில்ஸ் ஓட்டலில் சந்திக்க டிரம்ப் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். அங்கு நான் சென்றபோது டிரம்ப்என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார்'' எனத் தெரிவித்தார்.

முன்னதாக ஜெசிகா லீட்ஸ் என்ற பெண், “ நான் கடந்த 1980-களில் விமானத்தில் பயணித்தபோது, என் அருகில் அமர்ந்திருந்த டிரம்ப் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்'' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2-வது பெண்

மேலும்,  கிறிஸ்டன் ஆன்டர்சன் என்ற ஒரு பெண், வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “ கடந்த 1990களில் டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார்'' என குற்றம் சாட்டினார்.

மறுப்பு

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து நார்த் கரோலினாவில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் பேசுகையில், “ எனக்கு ஜெர்வோஸ் என்ற பெண்ணை எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவரை எந்த ஓட்டலிலும் சந்தித்தது கிடையாது. என்னிடம் உதவியும், வேலையும் கேட்டு பலமுறை எனக்கு மின் அஞ்சல்கள் அனுப்பியிருந்தார். அதேபோல ஜெசிகா, கிறிஸ்டன் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையில்லை. அனைத்தும் பொய். இங்குள்ள ஊடகங்கள் அனைத்தும் எனக்கு எதிராக வேலை செய்து பிரசாரம் ெசய்து வருகின்றன.

சர்வதேச வங்கிகளுடன்  ரகசியமாகச் சந்தித்து, அமெரிக்காவின் இறையான்மைக்கு எதிராக ஹிலாரி சதி செய்து வருகிறார்'' எனத் தெரிவித்தார்.

 

 

click me!