ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் வரும்போது 50000 தொண்டர்கள்... இபிஎஸ்சை டரியில் ஆக்கிய கிருஷ்ணமூர்த்தி.

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2022, 6:39 PM IST
Highlights

ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக தலைமை அலுவலகம் வரும் போது 50 ஆயிரம் தொண்டர்கள் திரள்வார்கள் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தலின்போது தான் என்ற அகங்காரத்தில் செயல்பட்டதால்தான் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக தலைமை அலுவலகம் வரும் போது 50 ஆயிரம் தொண்டர்கள் திரள்வார்கள் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி  தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தலின்போது தான் என்ற அகங்காரத்தில் செயல்பட்டதால்தான் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே கடும் மோதல் நிலவு வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் அதிமுக கட்சித் தலைமை அலுவலகம் வர உள்ளதால் அதற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் அவரின் ஆதரவாளர்களில் ஒருவரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மனு கொடுத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதையும் படியுங்கள்: படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டுகிறார்... அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி!!

அப்போது கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வருவதையொட்டி தொண்டர்கள் அதிக அளவில் கூட இருப்பதால் டிஜிபியிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்தேன், இடைக்கால பொதுச்செயலாளர் என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி துணிவிருந்தால் தைரியமிருந்தால், பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க சொல்லுங்கள் பார்ப்போம். கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்கிறார். அவர் விரைவில் கட்சி பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அதிமுக என்ற கட்சியை பாதுகாக்க வேண்டியது பன்னீர்செல்வத்தின் கடமை.

இதையும் படியுங்கள்: பொய்யை சொல்லி மாணவர்களை ஏமாற்றிய திமுக..! ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை- ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

அவர் எப்போது வேண்டுமானாலும் அதிமுக  அலுவலகத்திற்கு வருவார், ஓபிஎஸ்சைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கோ, கே.பி முனுசாமிக்கோ, ஜெயக்குமாருக்கோ எந்த தகுதியும் இல்லை. தான் என்ற அகங்காரத்தோடு எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டதால்தான் தேமுதிகவினர் கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து பிரிந்தனர். அதுதான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். கே.பி முனுசாமி திமுகவுடன் கள்ளத்தொடர்பு இருந்து வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தொகுதியை திமுகவினருக்கு தாரை வார்த்துக் தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை துரத்தியது போன்று ஒண்டவந்த பிடாரி எடப்பாடி பழனிச்சாமி கட்சித் தொண்டர்களாகிய எங்களை விரட்ட பார்த்தால் அது நடக்காது. கட்சித் தொண்டர்களின் காலில் விழுந்து என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிச்சாமி கெஞ்சும் நிலை வரும் என்றார்.  
 

click me!