பிஜேபியை எதிர்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.. ராகுல் காந்திக்கு எதிராக துள்ளி குதித்து வந்ந சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2022, 5:22 PM IST
Highlights

பாஜகவை எதிர்க்க ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை என சீமான் விமர்சித்துள்ளார். காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் செல்வது நடைபயணம் அல்லது அது நடைப்பயிற்சி என்றும் சீமான் விமர்சித்துள்ளார்

பாஜகவை எதிர்க்க ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை என சீமான் விமர்சித்துள்ளார். காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் செல்வது நடைபயணம் அல்லது அது நடைப்பயிற்சி என்றும் சீமான் விமர்சித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அவரது பின்னால் ஏராளமான மக்கள் அணிவகுத்து பயணத்தில் கலந்து வருகின்றனர், அவரின் இந்த நடைபயணம் மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரது பயணத்தை விமர்சித்து வருகின்றன, அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராகுல்காந்தியின் இந்த நடைபயணத்தை விமர்சித்துள்ளார். மதுரை உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியின் இல்ல காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

இதையும் படியுங்கள்:எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு... உயர்நீதி மன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி

உசிலம்பட்டி மக்களுடைய நீண்டநாள் கோரிக்கை, 58 கிராமங்கள் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்  என்பதுதான், இதை நாம் தமிழர் கட்சி இதை பலமுறை கோரிக்கையாக வைத்துவிட்டது, ஆனால் இதற்கு மேல் அரசுக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை, கால்வாய்களை திறப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றார். அப்போது ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமையை பற்றித் தான் பேசுகிறார், அதனால் தேசிய இனங்களில் உரிமை பறிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம்.!வாய் நீளம் காட்டிய திமுக...தொடரும் மாணவிகளின் தற்கொலை - இபிஎஸ் ஆவேசம்

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஒரே தேர்தல் என்பதால் ஒரு மாநிலத்தின் தேசிய இனங்களின் உரிமை அறவே பறிக்கப்படுகிறது, இப்போது எந்த திட்டத்தை எதிர்த்து பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது? நீட்டா? ஜிஎஸ்டியா? எந்த திட்டமாக இருந்தாலும் அதனுடைய வேர் காங்கிரசாக இருக்கிறது. அதனால் நீங்கள் எதையும் பேச தகுதியற்று போய்விட்டீர்கள். அரை நூற்றாண்டு காலம் இந்தியாவைப் உங்கள் தாத்தா முதல் நீங்கள் வரை ஆட்சி செய்து இருக்கும்போது, முதன்மைச் சாலையில் ஏன் நடைபயணம் செல்கிறீர்கள். என்னை போன்று கிராமத்திற்கு வாருங்கள் அப்போதுதான் மக்கள் எவ்வளவு வறுமையோடு இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும்.

பிரதான சாலையில்  காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் நடப்பது நடைப்பயிற்சியே, அது நடை பயணம் அல்ல, இந்த அரசு செய்யும் எதேச்சதிகாரத்தை மக்கள் மன்றத்தின் மூலம் மக்களை கூப்பிட்டு வைத்து பேசுங்கள், அதற்கு நீங்கள் தகுதி இல்லை எனில் இந்த திட்டங்களை எல்லாம் நீங்கள்தான் கொண்டு வந்தீர்கள் என ஒரே வரியில் சொல்லி முடித்து விடுவார்கள். இவ்வாறு  சீமான் ராகுல் காந்தியை விமர்சித்தார். 
 

click me!