ஓபிஎஸ் கட்சி பெயரை பயன்படுத்துவது தவறு... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Sep 9, 2022, 6:28 PM IST
Highlights

ஓபிஎஸ் கட்சி பெயறை பயன்படுத்துவது தவறு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஓபிஎஸ் கட்சி பெயறை பயன்படுத்துவது தவறு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் பூதகரமாகியுள்ளது. மேலும் ஒற்றை தலைமை  விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, இருவரும் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியிலிருந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிங்க: பிஜேபியை எதிர்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.. ராகுல் காந்திக்கு எதிராக துள்ளி குதித்து வந்ந சீமான்.

இந்த வழக்கில் ஆக.17 ஆம் தேதி, வழக்ககை விசாரித்த தனி நீதிபதி, 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்திருந்தார்.  இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் மனு அளித்தோம். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு தான் தற்போதைக்கு இறுதியானது.

இதையும் படிங்க: ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம்.!வாய் நீளம் காட்டிய திமுக...தொடரும் மாணவிகளின் தற்கொலை - இபிஎஸ் ஆவேசம்

அதிமுகவின் கோயிலான தலைமை அலுவலகத்தை சூறையாடி சேதப்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அதிமுக அலுவலகத்திற்கு வருவதற்கு ஓபிஎஸ்-க்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஓபிஎஸ் வருகை என்பது சட்டவிரோதம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அதிமுக  அலுவலகத்தை சூறையாடியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? ஓபிஎஸ் கட்சியின் பெயரை பயன்படுத்துவது தவறு. ஓ.பி.எஸ். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இல்லாத நிலையில் அவர் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருவது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓபிஎஸ் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவித்தார். 

click me!