40 ஆண்டு ஆலமரம்.. பசுமைத்தாயகத்தின் கோரிக்கை.! இதோடு கடமை முடியல - அன்புமணி ராமதாஸ் உருக்கம்

By Raghupati R  |  First Published Mar 12, 2023, 7:35 AM IST

பசுமைத்தாயகத்தின் கோரிக்கையை ஏற்று வீழ்த்தப்பட்ட ஆலமரத்தை மீண்டும் நடுவதற்கு ஏற்பாடு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கும், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.


பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரத்தில் இருந்து வெட்டி வீழ்த்தப்பட்ட 40 ஆண்டு ஆலமரம் மீண்டும் அதேபகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடப்பட்டிருக்கிறது. வீழ்த்தப்பட்ட ஆலமரத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

Tap to resize

Latest Videos

சூனாம்பேட்டில் ஆலமரம் வெட்டப்பட்டதிலிருந்தே அதற்கு புத்துயிரூட்டுவதற்காக பசுமைத்தாயகம்  தொடர் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்பயனாகவே இது சாத்தியமாகியுள்ளது. இது பசுமைத்தாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு காரணமான பசுமைத்தாயகம் நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்.

இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்

பசுமைத்தாயகத்தின் கோரிக்கையை ஏற்று வீழ்த்தப்பட்ட ஆலமரத்தை மீண்டும் நடுவதற்கு ஏற்பாடு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கும், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரத்தில் இருந்து வெட்டி வீழ்த்தப்பட்ட 40 ஆண்டு ஆலமரம் மீண்டும் அதேபகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடப்பட்டிருக்கிறது. வீழ்த்தப்பட்ட ஆலமரத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது!(1/4) pic.twitter.com/ExVcWM5yv5

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss)

ஆலமரம் நட்டதுடன் நமது கடமைகள் முடிவடைந்து விடவில்லை. ஆலமரம் மீண்டும் துளிர்க்கும் வரை அதை தோட்டக்கலைத்துறையினர் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆலமரம் மீண்டும் தழைப்பதையும், பாதுகாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

இதையும் படிங்க..ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

click me!