அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களும், பழனிசாமிக்கு எதிராக உள்ளனர். அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பின் வெளிப்பாடுதான், இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது. அதிமுகவை சாதி கட்சியாக இபிஎஸ் மாற்றிவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் தான் வரும். தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
சிவகங்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை ஒட்டி இன்று சிவகங்கை மாவட்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இந்நிலையில், இபிஎஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருது அழகுராஜ்;- சிவகங்கையில் எடப்பாடி கூட்டத்திற்கு ஆணுக்கு 500, பெண் என்றால் 200, சிறப்பு போன்ஸ் ஆக ஒரு குவாட்டர், பிரியாணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் கூட்டம் கூட்ட முடியாமல் வெளிமாவட்டங்களில் இருந்து மக்களை அழைத்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும். தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும்.
அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களும், பழனிசாமிக்கு எதிராக உள்ளனர். அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பின் வெளிப்பாடுதான், இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது. அதிமுகவை சாதி கட்சியாக இபிஎஸ் மாற்றிவிட்டார். இபிஎஸ் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும். வயிறெரிஞ்சு சொல்கிறேன்.. இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம் கொல்லங்குடி காளி கோயிலுக்குச் சென்று காசை வெட்டி போட்டுட்டுதான் போவோம் என இபிஎஸ்க்கு சாபம் விட்டார்.
மேலும், சசிகலா அவர்கள் நல்லவரோ, கெட்டவரோ எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள் அவரை நாய் என்றும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தொப்பியை போட்டுக்கொண்டு அண்ணன் தினகரன் என்று சொல்லிவிட்டு, காரியம் முடிந்த உடனே தினகரனுக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று சொன்னார். 4 ஆண்டுகள் ஆட்சியை நடத்த ஓபிஎஸ் காலை சுற்றி வந்துவிட்டு இப்போது ஆட்சி போனதுடன் ஓபிஎஸை ஒழிக என்கிறார்கள். துரோகத்திற்கு இனம் கிடையாது. எடப்பாடியை பொறுத்தவரை துரோகத்தில் ஊறி இருக்கும் நச்சுப்பாம்பு என்று மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.