மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குசாவடி அளவில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். - எடப்பாடி பழனிசாமி.
கடந்த வாரம் அதிமுக ஓ பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது போட்டி பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை செய்தனர். ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சமீபத்தில் ஓபிஎஸ் நியமித்தார். இதையடுத்து அவர் வழிகாட்டுதலின் பெயரில், தற்போது அவரின் தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்தது.
இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அலுவலகத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க.. Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!
அப்போது பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குசாவடி அளவில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். ஓபிஎஸ் பணத்தைக் கொடுத்து கூட்டத்தைக் கூட்டியுள்ளார். திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும்.
எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக முடிவு செய்யும். அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். அதிமுகவை பாஜக எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை. இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என எப்போதும் பாஜக வற்புறுத்தியதில்லை. தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது என்று பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படிங்க.. DMK Vs BJP : 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!