தேசியம் அதிகம் இருக்கும் பகுதி இது.. நட்டாவின் பயணம் மிகுந்த எழுச்சியாக இருக்கும்.. அண்ணாமலை சரவெடி..!

By vinoth kumarFirst Published Dec 27, 2022, 1:49 PM IST
Highlights

டெல்லி விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக  பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வருகை காலதாமதம் ஆனது.  ஆகம விதிப்படி கோயில் 11.30 மணியை ஒட்டி நடை சாத்த வேண்டும் என்பதால் நாங்கள் வந்துள்ளோம். தமிழக மக்கள், இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிராத்தனை செய்தோம். 

பாஜக தேசிய தலைவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக கோவையில் இருந்து அதனை தொடங்குகிறார் என அண்ணாமலை கூறியுள்ளார். 

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- டெல்லி விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக  பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வருகை காலதாமதம் ஆனது.  ஆகம விதிப்படி கோயில் 11.30 மணியை ஒட்டி நடை சாத்த வேண்டும் என்பதால் நாங்கள் வந்துள்ளோம். தமிழக மக்கள், இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிராத்தனை செய்தோம். 

தேசிய தலைவர் வந்தவுடன் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று மாலை மேட்டுப்பாளையம்  பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக பொறுத்த வரை அவர்கள் ஏற்கனவே தேதியை அறிவித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகின்றனர். பாஜக நிகழ்ச்சி 3 நாட்களுக்கு முன்பு தான் திட்டமிடப்பட்டது. பாஜகவை பொறுத்த வரை தேசிய தலைவர் இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்காக சுற்றுபயணத்தை நடத்துகின்றார். குறிப்பாக தேசிய தலைவர் பயணத்தை தமிழகத்தில் கோவையில் இருந்து துவங்க இருப்பதாக கூறினார். இதை முடித்து விட்டு ஒடிசா புவனேஸ்வர் செல்கின்றார். 

கோவையில் திறமையாக செயல்படும் எம்.ஏல்.ஏ இருக்கின்றார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்  நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த பகுதி மக்கள் பாஜகவை சார்ந்து இருக்கும் மக்கள். தேசியம் அதிகம் இருக்கும் பகுதி. அதனால் தேசிய தலைவரின் இந்த பயணம் மிகுந்த எழுச்சியாக இருக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!