2024 -ல் அமித்ஷா மோடி தமிழகத்தில் போட்டி..?? மாஸ் காட்டும் அர்ஜூன் சம்பத்.

Published : Sep 12, 2022, 01:37 PM IST
 2024 -ல் அமித்ஷா மோடி தமிழகத்தில் போட்டி..?? மாஸ் காட்டும் அர்ஜூன் சம்பத்.

சுருக்கம்

வரும் 2014 லோக்சபா தேர்தலில் இன்றைய அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடி ஆகியோர் தமிழகத்தில் போட்டியிட வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். 

வரும் 2014 லோக்சபா தேர்தலில் இன்றைய அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடி ஆகியோர் தமிழகத்தில் போட்டியிட வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். அப்படி செய்தால் மட்டுமே 40 தொகுதிகளும் பாஜகவின் கைவசம் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சி இருந்தாலும் கூட தமிழகத்தில் அக்கட்சியால் கால் ஊன்ற முடியவில்லை, தென்னிந்தியாவில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் ஓரளவுக்கு பாஜகவின் செல்வாக்கு வளர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் அதன் வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. 

இந்நிலையில்தான் தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அக்காட்சி தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணியில் இருந்தாலும் கூட பாஜகவின் தமிழகத்தின் தனித்துவமிக்க கட்சியாக உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் பாஜக மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைவரானது முதல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 25 இடங்களை கைப்பற்றும் என அண்ணாமலை உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  விருதுநகரை விட்டு வெளியே செல்லலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ராஜேந்திர பாலாஜி வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு.!

இது ஒருபுறமிருக்க இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழகத்தில் அமித்ஷா மோடி ஆகியோர் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளார். அர்ஜுன் சம்பத் எழுதிய எவரும் எட்ட முடியாத எட்டு ஆண்டு சாதனை மோடியின் சாதனை விளக்க புத்தகம் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. அது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் பென்னிக் குவிக் விழா நடந்திருந்தால் ஒ.பன்னீர்செலவத்தை அழைத்து இருப்போம்...அமைச்சர் ஐ.பெரியசாமி.

அத்துடன் சுதந்திரப் போராட்ட தியாகியான தீரன் சின்னமலை  வ. உ சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பாரதியார் உள்ளிட்டோரின் வாரிசுகள் கலந்துகொண்டனர்.  அந்நிகழ்ச்சியில் பேசி அர்ஜுன் சம்பத் திராவிட மாடல் ஆட்சி என்பது வரலாற்றை இருட்டடிப்பு செய்து வருகிறது, முதன் முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்ட  ஓமந்தூரார் தோட்டத்தில் ஒமந்தூராருக்கு  புகைப்படங்களோ, சிலையோ இல்லை, ஆனால் கருணாநிதியின் சிலைகள் திறக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைவர்களை இருட்டடிப்பு செய்துவிட்டு எங்கு பார்த்தாலும் ஈவேரா, அண்ணாதுரை, கருணாநிதி சிலை வைக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தை பொம்மை நாடாக்க பார்க்கிறார்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தியாகிகளின் நினைவிடத்திற்கு செல்லாமல் மிஷினரிகள் நடத்தும் இடங்களுக்குச் சென்று வருகிறார், வீணாக தமிழகத்திலிருந்து 39 எம்பிகள் இருந்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடி ஆகியோர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அவர்கள் இங்கு போட்டியிட்டால்தான் தமிழகத்தில் பாஜக வலுப்பெறும், 40 தொகுதிகளும் பாஜக வசம் வரும், தமிழகம் வளரும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்
நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்