விருதுநகரை விட்டு வெளியே செல்லலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ராஜேந்திர பாலாஜி வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு.!

Published : Sep 12, 2022, 01:29 PM ISTUpdated : Sep 12, 2022, 01:45 PM IST
விருதுநகரை விட்டு வெளியே செல்லலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ராஜேந்திர பாலாஜி வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு.!

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டாலும் பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டாலும் பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின்  நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;- இபிஎஸ் ஆட்சியை வேண்டாமென்றவர்கள் UPSஐ தேடுகிறார்கள்.. சீனாக சீனுக்கு வரும் ராஜேந்திர பாலாஜி.!

இதையடுத்து  ஜாமீன் கோரிய அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது, சாட்சிகளை கலைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் தனது ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று   உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, காவல்துறையிடம் தெரிவித்து தமிழ்நாட்டுக்குள் பயணம் செய்யலாம். நிபந்தனையை தளர்த்தி விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  “60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி