ராகுல் வருகைக்கு பணம் வசூலித்தேனா.?எம்.பி பதவியை ராஜிமானா செய்ய தயாரா? ஜோதிமணிக்கு சவால் விடுத்த காங்.நிர்வாகி

By Ajmal Khan  |  First Published Sep 12, 2022, 1:30 PM IST

ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு கே.எஸ் அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உழைத்த நிலையில், நீங்கள் என்ன செய்தீர்கள் என விளக்க தயாரா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு, காங்கிரஸ் துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்
 


இந்தியா ஒற்றுமை பயணத்தில் சர்ச்சை

இந்தியா ஒற்றுமை என்கிற பெயரில் ராகுல் காந்தி கடந்த 7 ஆம்தேதி கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கினார். இந்த நடை பயணம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் மாநில துணை தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு சமூக வலை தளம் மூலம் பகிரங்கிரமாக கடிதம் எழுதியுள்ளார். இதில், அன்பு சகோதரியார்‌ நாடாளுமன்ற உறுப்பினர் அம்மையார் ஜோதி மணி அவர்களுக்கு வணக்கம்.இதை பேஸ் புக் வாயிலாக எழுத வேண்டிய அவல நிலை வந்து விட்டதை எண்ணி வருத்தம் அடைகிறேன்.தங்களிடம் கன்னியாகுமரியிலேய நேரடியாக கேட்டு விட நினைத்தேன்.தங்களை தனியாக சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை போனில் தங்களை அழைத்தேன் தாங்கள் எடுக்கவே இல்லை.ஆனால் வேறு வழியின்றி இதன் மூலம் தங்கள் பதிலை பெற விரும்புகிறேன்.

Tap to resize

Latest Videos

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் தோல்வி...! தலையும் வாலும் புரியாமல் வழிகாட்டும் ஆளுநர்- முரசொலி தலையங்கம்

பணம் வசூலித்தேனா..? நிரூபிக்க தயாரா?

நான் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு நிறைய வசூல் செய்து விட்டதாக ஒரு முக்கிய தலைவர் ஒருவரிடம் கூறி உள்ளீர்கள்.இதை கேட்ட உடன் என் மனம் துடிதுடித்து விட்டது.நான் தங்களுக்கு சவால் விட்டு கூறுகிறேன் நான் ஒரே ஒருவர் இடத்தில் வசூல் செய்து இருக்கிறேன் என்று தாங்கள் நிருபித்து விட்டால் என்னுடைய மாநில துணைத் தலைவர் பதவியை அந்த நொடியே ராஜினாமா செய்து விடுகிறேன்.அப்படி‌ தாங்கள் நிருபிக்கா விட்டால்‌ நீங்கள் உங்கள் எம்பி பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய தயாரா? மேலும் தாங்கள் நன்றி சொல்லி பேஸ் புக்கில் பதிவு செய்து உள்ளதை படித்தேன். சிரிப்பு தான் வந்தது. உழைப்பை திருடாதீர்கள் என கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை போட்ட முதலமைச்சர்..! ஸ்டாலின் ராஜ்யத்தில் பூஜ்யமே பரிசு- ஆர்.பி உதயகுமார்

உழைப்பை திருட வேண்டாம்

இரவு பகல் பாராமல் இந்த வயதிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் அவர்கள் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் மாவட்டம் மாவட்டமாக கூட்டம் போட்டு ராகுல் வருகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி‌ வந்த கூட்டம் தான் அது. அவருக்கு துணையாக திரு இவிகேஎஸ் இளங்கோவன் திரு கே.வி.தங்கபாலு திரு சு.திருநாவுக்கரசர் போன்றவர்கள் எடுத்த பெரும் முயற்சி மறுக்க முடியுமா உங்களால். இந்த பாத யாத்திரையில் தங்கள் பங்களிப்பு என்ன என்பதையும் அந்த பேஸ் புக்கில் தாங்கள் குறிப்பிட்டு இருக்க‌வேண்டும். எல்லா வற்றையும் நீங்களே செய்தது போல எதையுமே செய்யாத தாங்கள் எழுத எப்படி உங்கள் மனசாட்சி இடம் தருகிறது‌.எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த செலவில் பங்கு எடுத்து கொண்டார்கள் தங்கள் பங்களிப்பு இதில் என்ன அதில் கூட பங்களிப்பு இல்லாத தாங்கள் பேஸ் புக்கில் எழுதுவது எந்த வகையில் நியாயம்.உங்களை பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு சகோதரர் பொன் கிருஷ்ணமூர்த்தி நன்றி என அந்த கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் தோல்வி...! தலையும் வாலும் புரியாமல் வழிகாட்டும் ஆளுநர்- முரசொலி தலையங்கம்

 

click me!