ஆதார் எண் இணைத்தால்தான் 100 யூனிட் மின்சாரம் இலவசமா? அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய பரபரப்பு தகவல்.!

By vinoth kumarFirst Published Nov 19, 2022, 6:46 AM IST
Highlights

தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னை உட்பட எந்த இடங்களிலும் மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லை.

வரும் நாட்களில் அதிக மழை பெய்தாலும் சீராக மின் விநியோகம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் மின்சாரத்துறை ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- வரக்கூடிய நாட்களில் மழை அதிகமாக இருந்தாலும் கூட எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தப் பட்டிருக்கின்றன.  ஏற்கனவே, ஜுன் மாதம் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு பராமரிப்பு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 44,000 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இப்படி தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து.. பாஜக நிர்வாகிக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்..!

சென்னை உட்பட எந்த இடங்களிலும் மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லை. 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சீர்காழியைப் பொறுத்தவரைக்கும் முதலமைச்சர் அவர்களே நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி இருக்கிறார்கள்.  36 மணி நேரத்திற்குள்ளாக  சீர்காழியில் பாதிக்கப்பட்ட அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டிருக்கின்றன.  அங்கு பழுதடைந்த மின் கம்பங்கள் எல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன.  ஏறத்தாழ 46 மின்மாற்றிகள் வரை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படிங்க;- கழுவி கழுவி ஊற்றி விட்டு.. பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்தவர் கோமாளியா? உத்தமன் அண்ணாமலை கோமாளியா? BJP

மிக சிறப்பாக பணியாற்றக்கூடிய சீர்காழி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுகோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் அந்த பணியில் ஈடுபட்டு மிகச்சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.  அவர்களுக்கு என் சார்பாகவும், மின்சார வாரியத்தின் சார்பாகவும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 16 உயர் அழுத்த மின்மாற்றிகளின் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு கனமழை பெய்தும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டதை பொதுமக்கள் மனதார பாராட்டியுள்ளனர். மழைக்காலங்களில் அனைத்து மின் நுகர்வோர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.  மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும் என்றார். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். 

இதையும் படிங்க;-  மழை பெய்தாலே கரெண்ட் கட் பண்ணிடுவாங்க என்று மக்கள் நினைக்கும் சூழல் இப்போது இல்லை.. அமைச்சர் செந்தில் பாலாஜி.!

click me!