
யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் தனக்கில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக மதுரையில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவு துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக தான் உள்ளது ஆனால் கூட்டுறவுத்துறையில் தினமும் கடத்தல், ரெய்டுகள் அதிகரிப்பதாக பல்வேறு செய்திகள் வருகிறது. கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் எனக்கு திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி கொடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிப்படை தன்மை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இதையும் படிங்க: திராவிட ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தை கொள்ளையடிக்கிறது ஒரு குடும்பம்… சவுக்கு சங்கர் பரபரப்பு கருத்து!!
குறைகள் வரவேற்கப்படுகிறது. குறைகள் எங்கே நடக்கிறது என்று சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவரைக் கேளுங்கள் என்ன நடந்தது எங்கே தவறு நடந்தது என்று. அவர் திருப்தி அடையவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? மக்கள் திருப்தி அடைய வேண்டும். எனக்கும் அமைச்சர் சக்கரபாணிக்கும் 7 கோடி மக்கள் திருப்தி அடைய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் திருப்தி அடைய வேண்டும். வேறு யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் 50 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறேன். அமைச்சர் சக்கரபாணி 35 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார். ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மக்களின் திருப்தி தான் எங்களுக்கு திருப்தி. எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் கைகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதுதான் எங்களது வேலை. நாங்கள் இருவரும் வேலைக்காரர்கள்.
இதையும் படிங்க: அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி நோக்கி கிளம்பிவிட்டது..! ஓபிஎஸ்,டிடிவி இணைப்பு காலம் பதில் சொல்லும்- செல்லூர் ராஜூ
மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் அவர்கள் திருப்தி அடைய வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது மக்களுக்கான துறை உணவுப்பொருள் வழங்கள் துறையும் அதற்காகவே உள்ளது. எங்காவது குறை இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் மாலை போட்டு உங்களுக்கு மரியாதை செய்வோம். குறையை நீங்கள் சொன்னால் நாங்கள் சந்தோஷப்படுவோம். மக்கள் தான் திருப்தி அடைய வேண்டும். ரேஷன் கடையை பற்றி தெரியாதவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் நிதியே கேட்கவில்லை. சுய லாபத்திற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. பொதுநல நோக்கோடு அரசியலுக்கு வந்தவர்கள் பத்தாயிரம் பேருக்கு பணம் வாங்காமல் வேலை கொடுத்திருக்கிறோம். வேற எந்த மாவட்டத்திலாவது அதுபோல செய்திருக்கிறார்களா என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.