அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி நோக்கி கிளம்பிவிட்டது..! ஓபிஎஸ்,டிடிவி இணைப்பு காலம் பதில் சொல்லும்- செல்லூர் ராஜூ

By Ajmal Khan  |  First Published Nov 18, 2022, 4:02 PM IST

ஒருசிலர் பிரிந்து செல்வார்கள், தேர்தலில் ஒன்றுசேர்வார்கள் அது அதிமுகவின் பாலிசிகளில் ஒன்றுதானே என கூறிய செல்லூர் ராஜூ,  பிரிந்து சென்றவர்களை சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவை  எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார் என கூறினார்.


திறம்பட பணியாற்றினேன்

மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட பகுதியான தாராபட்டி பகுதியில்  சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக ரூ.52.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தரைப் பாலம், பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட பணிகளை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு,  கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத்துறையில் மாதம் 30 நாட்களில் 20 நாட்கள் நேரடியாக ரேசன்கடைகளுக்கே சென்று ஆய்வு செய்ததாகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கு கொடுத்த பதவியை தாம் திறம்பட செய்ததாகவும் தெரிவித்தார்.  இதன் காரணமாக  பொதுமக்களுக்கு நல்ல ரேசன் பொருட்கள் சென்று சேர்ந்ததாகவும் கூறினார்.  

Tap to resize

Latest Videos

தெலுங்குத் திரைப்படங்களை வெளியிடவிடமாட்டோம் .! விஜயின் வாரிசு படத்திற்கு ஆதரவாக களம் இறங்கிய சீமான் எச்சரிக்கை

டெல்லிக்கு புறப்படும் அதிமுக ரயில்

ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார், ரேசன் அரிசை கடத்தலை தடுக்க உரிய சட்டம் இயற்றி பாதுகாத்து வந்ததால் கூட்டுறவுத்துறை 27 தேசிய விருதுகளை வாங்கியதாகவும் தெரிவித்தார். தற்போது கூட்டுறவுத்துறையை ஆளுங்கட்சி அமைச்சரே (நிதியமைச்சர்)விமர்சனம் செய்யும் அளவுக்கு கேள்விக்குறியாகிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். அதிமுகவை நம்பிய கூட்டணி கட்சிகள் நிச்சயம் பலனை அடையும். தமிழகத்திலிருந்து அதிமுக எக்ஸ்பிரஸ் கூட்டணி டெல்லி நோக்கி புறப்பட்டுவிட்டதாகவும், இதில் ஏறுபவர்கள் நம்பி ஏறலாம். நிச்சயம் பலன் அடைவார்கள் சிதறி சென்றவர்கள் நிலைமை தான் மோசமாகிவிடும் என கூறினார்.

விரைவில் அதிமுக பொதுக்குழு.. வாய்ப்பு கிடைத்தால் டிடிவி.யை சந்திப்பேன்.. இபிஎஸ்ஐ அலறவிடும் ஓபிஎஸ்.!

இபிஎஸ் முடிவு எடுப்பார்

ஜெயலலிதாவின்  தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக தான் உள்ளதாக தெரிவித்தவர்,  ஓபிஎஸ், டிடிவி தினகரன  ஆகியோர் அதிமுகவுடன் இணைவது தொடர்பாக காலம்தான் பதில் சொல்லும் என கூறினார். ஒருசிலர் பிரிந்து செல்வார்கள், தேர்தலில் ஒன்றுசேர்வார்கள் அது அதிமுகவின் பாலிசிகளில் ஒன்றுதானே என கூறினார். பிரிந்து சென்றவர்களை சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவை  எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! 17 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை- வானிலை மையம்

click me!