
மாணவி பிரியா மரணத்தில் கடமையை செய்ய தவறிய மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட காது மூக்கு தொண்டை உயர்நிலை நிலையத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு நிகழ்சிகள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க;- பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்.. எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது.. முதல்வர் ஸ்டாலின்.!
இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- மாணவி பிரியா விவகாரத்தில், முதல்நாள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கால் அகற்றப்பட்ட விவகாரத்தில் கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினேன். அடுத்த நாள் உடனடியாக காலையிலேயே ஒரு மருத்துவ விசாரணை குழு அமைத்தோம். அந்த குழுவினர் விசாரித்து நடத்திய கவன குறைவு தான் இதுக்கு காரணம் என்று அறிக்கை கொடுத்தனர்.
ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டம் இருதயத்துக்கும் சிறுநீரகத்துக்கும் செல்லுகிற அந்த ரத்த ஓட்டம் முழுமையாக நின்று விட்டதன் விளைவாக குழந்தை நம்மை விட்டு பிரிந்தது. மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை நடைபெறுகிறது. இந்த கவனக்குறைவுக்கு யாரெல்லாம் காரணமானவர்களோ, அவர்களை எல்லாம் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே.? திமுகவை அட்டாக் செய்த பாஜக !