திராவிட ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தை கொள்ளையடிக்கிறது ஒரு குடும்பம்… சவுக்கு சங்கர் பரபரப்பு கருத்து!!

By Narendran SFirst Published Nov 18, 2022, 8:59 PM IST
Highlights

திராவிட ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தை ஒரு குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திராவிட ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தை ஒரு குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அதன்பேரில் சவுக்கு சங்கர்  கடந்த செப்.15 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மாணவி பிரியா மரணத்துக்கு காரணமான ஒருத்தரையும் சும்மா விடமாட்டோம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் விசாரணை முடியும் வரை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அவர் மீது இருக்கும் மேலும் 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற விசாரணை முடிந்ததும் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி நோக்கி கிளம்பிவிட்டது..! ஓபிஎஸ்,டிடிவி இணைப்பு காலம் பதில் சொல்லும்- செல்லூர் ராஜூ

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், திராவிட ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. அதைப்பற்றி பேசியதற்காகத்தான் என் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. வெளியே வந்து இந்த கொள்ளைக் கூட்டத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துவேன் என்று தெரிவித்தார். அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கர் மீது இருக்கும் மேலும் 4 வழக்குகளிலும் எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!