கூட்டணி குறித்த எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு வரவேற்கத்தக்கது... திருமாவளவன் கருத்து!!

Published : Nov 19, 2022, 12:07 AM IST
கூட்டணி குறித்த எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு வரவேற்கத்தக்கது... திருமாவளவன் கருத்து!!

சுருக்கம்

எடப்பாடி பழனிச்சாமி  பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று பேசியது வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்‌.திருமாளவன் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி  பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று பேசியது வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்‌.திருமாளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ் கொலை வழக்கில் 6 பேர் அண்மையில் விடுதலை ஆகியுள்ளனர் உச்ச நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் தான் விடுதலை செய்துள்ளது. ஆளுனர் நடவடிக்கை எடுக்கவில்லை சட்டத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவார். இந்நிலையில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எதிர் பார்த்த ஒன்றுதான். இதை சட்ட பூர்வமாக அவர்கள் எதிர்கொள்வார்கள். மத்தியில் காங்கிரஸ், பாஜக எது ஆண்டாளும் ஈழத்தமிழர்கள் பொறுத்த வரை ஒரே நிலைபாட்டை தான் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை … பி.டி.ஆருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!!

பாஜக தொடர்ந்து  இரண்டு‌முறை ஆட்சிக்கு வந்தும் ஒரு அங்குலம் கூட ஈழத்தமிழர்கள் நலன்களில் முன்னேற்றம் இல்லை எனவும், நலன்களை கருத்தில் கொள்ளவில்லை என்பது தான் உண்மை. இன்னும் இந்தியா கடல் எல்லைக்குள் தமிழ்நாட்டின் மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க முடியவில்லை. இந்திய கடற்படையினரும் துப்பாக்கியால் சுடுகின்றனர். இலங்கை கடற்படையினரும் துப்பாக்கியால் சுடுகின்றனர் இந்த அவலம் தான் நீடிக்கிறது. எனவே 6 பேர் விடுதலை தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்தாலும் அவர்கள் விடுதலை செல்லும் என மறுபடியும் உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தும் என நான் நம்புகிறேன்.

இதையும் படிங்க: திராவிட ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தை கொள்ளையடிக்கிறது ஒரு குடும்பம்… சவுக்கு சங்கர் பரபரப்பு கருத்து!!

கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு முதல்வர் கூடுதலாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைகள் மேலும் நடக்காமல் இருக்க சிறுமிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்க்கு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். அதிமுக சுயமாக இருக்க வேண்டும் பாஜகவுடன் இணைய கூடாது. ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் மண்ணில் சமூக நீதியை காப்பாற்ற முடியும். அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்ற பொருளில் கருத்து ஒன்றை தெரிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கின்றது. அவருடைய பேச்சு வரவேற்கத்தக்க பேச்சு என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!
சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை