Watch : நாம ஏன் இடது கையில் வாட்ச் காட்டுறோம்? இதுக்கு ஏதும் அறிவியல் காரணம் இருக்கா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

By Ansgar RFirst Published May 21, 2024, 7:25 PM IST
Highlights

Why We Wear in Left Hand : கைக்கடிகாரங்கள் கடந்த இரு நுற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்தே புழக்கத்தில் உள்ளது. சில நூறு ரூபாய் முதல் பல கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் விற்பனையில் உள்ளது.

உலகத்திலேயே மனிதர்கள் மிகவும் சரியாக பயன்படுத்த வேண்டிய ஒன்று தான் நேரம். அதை அனுதினமும் நமக்கு காட்டுவது தான் கைகடிகாரம். கடந்த 1800ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து இந்த கைக்கடிகாரங்கள் புழக்கத்தில் இருக்கின்றது. குயின் கரலின் என்பவர் தான் கடந்த 1810 ஆம் ஆண்டு, முதல் கைக்கடிகாரத்தை வடிவமைத்தார். 

அன்று தொடங்கி இந்த 200 ஆண்டுகளாக கைக்கடிகாரங்கள் பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகின்றது. சில நூறு ரூபாய்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்களை நம்மளால் பெற முடியும். உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த கைகடிகாரத்தின் விலை சுமார் 450 கோடி என்று கூறப்படுகிறது. 

Latest Videos

AC யூஸ் பண்ணும் போது 'இந்த' தவறுகளை செய்யாதீங்க.. மின் கட்டணம் ஏகிறும்!

ஆனால் எத்தனை விலை கொடுத்து ஒரு கை கடிகாரத்தை வாங்கினாலும் பெரும்பாலும் அதை நாம் நமது இடது கைகளில் கட்ட ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து நாம் பலமுறை யோசித்து இருப்போம். உண்மையில் இடது கையில் பயன்படுத்தும் வகையில் தான் கை கடிகாரத்தை நிறுவனங்களும் தயாரிக்கின்றன. 

சரி அது ஏன்?

பொதுவாக மனித இனத்தில் வலது கை பழக்கம் உடையவர்கள் தான் அதிகம், ஆகையால் இடது கையில் கை கடிகாரத்தை கட்டும் பொழுது அதை சரி செய்யவும், அல்லது அதை பிடித்து நேரத்தை பார்க்கவும், கடிகாரத்தை இடது கையில் கட்டினால் தான் சரியாக இருக்கும். அதேபோல இடது கையில் கடிகாரத்தைக் கட்டி அதை வலது கையால் நாம் சரி செய்யும் பொழுது நமது வலது பக்க மூளை வலுவடையும் என்றும் கூறப்படுகிறது. 

அதே போல நமது வீட்டில் உள்ள கடிகாரத்தில் முள் வலதுபுறமாக நகர்வதை பார்த்து பழகிய நமக்கு, அதுவே கையில் இருக்கும்போது இடது கையில் இருந்தால் தான் நம்மால் சரியாக பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

வெயிட் லாஸ் டிபஸ் : வாக்கிங் செல்வதால் தொப்பையை குறைக்க முடியுமா? நிபுணர்கள் பதில்..

click me!