புதிதாக வாங்கும் தங்க நகையை உப்புக்குள் வைப்பதால் என்ன நடக்கும்? முக்கியமாக தெரிந்து கொள்ளுங்கள்!

By manimegalai aFirst Published Mar 15, 2020, 12:24 PM IST
Highlights

தங்க நகை வாங்குவதில் பல பெண்களுக்கும் அலாதி பிரியம். குருவி போல் சிறுக சிறுக காசு சேர்த்து வைத்து, தங்களுக்கு பிடித்த நகை வாங்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.
 

தங்க நகை வாங்குவதில் பல பெண்களுக்கும் அலாதி பிரியம். குருவி போல் சிறுக சிறுக காசு சேர்த்து வைத்து, தங்களுக்கு பிடித்த நகை வாங்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.

இப்படி வாங்கும் நகை நம்மிடம் நிலைக்க வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் இருக்கும். கஷ்டப்பட்டு, பார்த்து பார்த்து வாங்கும் தங்கம், நம்மிடம் நிலைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் பரிகாரம் தான், நாம் வாங்கும் புதிய தங்க நகைகளை உப்புக்கள் வைத்து எடுப்பது.

இதனால் என்ன நடக்கும்:

நாம் வாங்கும் தங்க நகைகளை உப்புக்கள் வைத்து எடுப்பதால், தங்கத்தின் மேல் உள்ள தோஷம் நீங்குவதாக நம்பப்படுகிறது. இதனால் நாம் வாங்கும் நகை, நம்மிடம் நிலைக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு பிறப்படுத்துடன், தங்க நகைகள் சேரும் என கூறப்படுகிறது.

உதாரணம்:

புதிய ஆடைகள் வாங்கும் போது, அதனை அணிவதற்கு முன் மஞ்சள் வைத்து அணிய வேண்டும் என்று சொல்வார்கள். அதே போன்ற ஒரு முறை தான் உப்புக்கள் தங்க நகைகளை வைத்து எடுப்பது.

மேலும் செய்திகள்: ரஜினி பற்றி கருத்து கூற 5 லட்சம் கேட்ட நடிகர்!
 

எப்படி செய்வது:

தங்க நகையை உப்புக்கள் வைத்து எடுக்க வேண்டும் என்பதால், அதனை நேரடியாக உப்பில் வைத்து விட கூடாது. ஒரு சுத்தமான துணியில், நீங்கள் வாங்கிய தங்க நகையை முடிந்து அதனை ஒரு நாள் உப்பில் வைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்: நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாகிறாரா சமந்தா?

அக்ஷய திருதியை அன்று நகை வாங்கினால் நல்லது என்று சிலர் நம்புவது போல், இந்த முறையையும் சிலர் நபுகிறார்கள்.

click me!