
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது ஒரு இயற்கையான செயலாகும். ஆனால் சிலர் வேலை, பயணம் அல்லது ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது உடலுக்கு பலவிதமான தீங்குகளை ஏற்படுத்தும்.
1. சிறுநீரக தொற்று :
சிறுநீர், சிறுநீர் பையில் நீண்ட நேரம் தங்கும்போது, பாக்டீரியாக்கள் பெருகும். இதனால், சிறுநீரக பாதை தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரின் நிறம் மாறுதல் (மங்கலான அல்லது அடர் மஞ்சள் நிறம்) சிறுநீரில் தீவிர துர்நாற்றம், வயிற்று கீழ்பகுதியில் வலி ஏற்படுதல் ஆகியன சிறுநீரக தொற்று இருப்பதற்கான முக்கியமான அறிகுறிகள் ஆகும்.
2. சிறுநீரக கற்கள் உருவாகுதல் :
சிறுநீரை வெளியேற்றாமல் நீண்ட நேரம் தக்கவைப்பது சிறுநீரகங்களில் உப்பு மற்றும் கனிமங்கள் சேர்ந்து கற்கள் உருவாக காரணமாகும். சிறுநீரகக் கற்கள் பெரியதாக வளர்ந்தால், கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் சிறுநீரில் இரத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
3. சிறுநீர் பை அதிக அழுத்தத்துடன் பெரிதாகுதல் :
சிறுநீர்பையில் நீண்ட நேரம் சிறுநீர் தேங்கி இருக்கும்போது, அதன் சுவர் நீட்டிக்கப்படுவதால் அதன் இயல்பான சுருக்கம் குறைந்து விடும். இதனால், சில நேரங்களில் சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாமல் போகும். சிறுநீர் கழித்த பிறகும் முழுமையாக கழிந்தது போல் உணரப்படாத நிலை,
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றுதல், இரவில் அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுதல் ஆகியன இதன் அறிகுறிகள் ஆகம்.
4. சிறுநீரக செயல்பாடு பாதிப்பு :
சிறுநீர் நீண்ட நேரம் அடக்கி வைக்கப்படும் போது, சிறுநீரகத்தில் அதிக அழுத்தம் ஏற்படும். இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மற்றும் பிற நீரிழிவு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இதே நிலை நீடித்தால், இது சிறுநீரக செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும்.
புரத சத்து கிடைக்க சிக்கன் தான் சாப்பிடணுமா? இந்த 6 சைவ உணவு இருக்கே
5. சிறுநீர்பை சுருக்கம் :
சிறுநீரை நீண்ட நேரம் அடிக்குவது வழக்கமானால் சிறுநீர்பை சுருக்கத்தை ஏற்படுத்தலாம். இது சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாத நிலைக்கு வழிவகுக்கும். இது இருதய நோய்கள், சிக்கலான சிறுநீரக தொற்றுகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
பொதுவாக, ஒரு நபர் 3 முதல் 6 மணிநேரம் வரையிலான சிறுநீர் தேக்கத்தை சமாளிக்கலாம். ஆனால், இதை தொடர்ந்து பழக்கமாக்கினால், மேலே கூறியபடி பல தீவிரமான விளைவுகள் ஏற்படலாம்.
சிறுநீரை உடனே வெளியேற்றுவதன் நன்மைகள் :
* சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
* சிறுநீரக கற்கள் மற்றும் UTI அபாயத்தைக் குறைக்கும்
* உடல் இயல்பாக செயல்பட உதவும்
* வயிற்று மற்றும் கீழ்பகுதி வலி ஏற்படுவதைத் தடுக்கும்
உடல்நலத்தைக் காப்பாற்ற சிறந்த வழிகள் :
* சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் கழிப்பறைக்கு செல்வது முக்கியம்.
* அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் (நாள் ஒன்றுக்கு 2-3 லிட்டர் வரை).
* அடிக்கடி சிறுநீர் அடைப்புக்கான பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.