ஆஹா என்ன டேஸ்டு டேஸ்டு.....! குழந்தைகளுக்கு விருப்பமான மீல் மேக்கர் -65...எப்படி செய்யணும் தெரியுமா ?

 
Published : Sep 28, 2017, 06:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ஆஹா என்ன டேஸ்டு டேஸ்டு.....! குழந்தைகளுக்கு விருப்பமான மீல் மேக்கர் -65...எப்படி செய்யணும் தெரியுமா ?

சுருக்கம்

what a taste mealmaker

ஆஹா என்ன டேஸ்டு டேஸ்டு.....! குழந்தைகளுக்கு விருப்பமான மீல் மேக்கர் -65...எப்படி செய்யணும் தெரியுமா ?

அசைவம் பிடிக்காதவர்களுக்கு சிக்கன் 65 செய்வதை போல் மீல் மேக்கரில் செய்தால் சூப்பராக இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மீல்மேக்கர் எப்படி செய்வது என்பதை பார்க்கலாமா

தேவையான பொருட்கள் :

சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) - 50 கிராம் (25 பெரிய பீஸ்)

கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்

தயிர் - 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - 2 இலைகள்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :

மீல் மேக்கரை கொதிக்கும் வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைத்துப் பிழிந்தெடுத்து வைத்துக்கொள்ளவும். பெரியதாக இருந்தால், இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, இஞ்சி-பூண்டு பேஸ்ட், தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் மீல் மேக்கரை சேர்த்து நன்றாக கிளறி அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து ஊற விடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பிரட்டி வைத்த மீல் மேக்கரை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்தெடுக்கவும்.

பொரித்த மீல் மேக்கர்-65 மேல் கறிவேப்பிலையைத் தூவி தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

 தயார் நிலையில் உள்ள, மீல்மேக்கரை  உங்கள் குழந்தைக்கு  கொடுத்து, அவர்கள் விரும்பி சாப்பிடுவதை ரசித்து பாருங்கள்

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்