நவீன வீடுகளில் திறந்த சமையலறைகள் பேஷனாகி வருகிறது. அவற்றை வாஸ்து குறைபாடுகள் இல்லாமல் எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் தங்கள் வீடுகளைக் கட்டும் போது வாஸ்து விதிகளை முக்கியமாக கருதுகின்றனர். படுக்கையறைகள், குளியலறை, சமையலறை, சாமி அறை, லிவிங் ரூம் ஆகியவை முக்கியமாக பார்க்கப்படுகின்றன. வீட்டின் பல்வேறு திசைகளை வாஸ்து நிர்ணயிக்கிறது. குறிப்பாக, திறந்த சமையலறைகள் நவீன வீடுகளில் பிரபலமாகி வருகின்றன. இருந்தாலும். இதற்கான வாச்துகளை அறிந்து இருப்பது முக்கியம். அதற்குத் தகுந்தவாறு தான் சமையலறை அமைக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் திறந்த சமையலறை இருந்தால், இந்த வாஸ்து விதிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சரிசெய்து சாத்தியமான எதிர்மறை விளைவுகளை தவிர்க்கலாம்.
திறந்த சமையலறைகளுக்கான முக்கிய வாஸ்து தீர்வுகள்
கதவு அல்லது சட்டகம் அவசியம்
உங்கள் வீட்டில் திறந்த சமையலறை இருந்தால், அதில் ஒரு கதவு அல்லது ஒரு சட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அமைப்பது வாஸ்து குறைபாடுகளை தவிர்க்க உதவுகிறது. இடப் பற்றாக்குறை காரணமாக ஒரு கதவு அல்லது சட்டத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்றால், சமையலறை முடியும் இடத்தில் ஒரு முக்கோண படிகத்தைத் தொங்க விட வேண்டும்.
வீட்டை சுத்தமா வச்சிக்க இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்!!
ஸ்வஸ்திக் சின்னத்தை வரையவும்
திறந்த சமையலறையில் வாஸ்து குறைபாடுகளைத் தவிர்க்க, சமையலறை பகுதி முடியும் சுவரில் ஒரு ஸ்வஸ்திக் சின்னத்தை வரையவும். ஸ்வஸ்திக் சின்னம் உங்கள் வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றலை அகற்ற உதவுகிறது. தொடர்ந்து கற்பூரம் எரிப்பதும் வாஸ்து குறைபாடுகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
கிட்சன் அலமாரிகளில் உள்ள விடாப்படியான எண்ணெய் பிசுக்கை ஈஸியா சுத்தம் செய்ய உதவும் டிப்ஸ்!
திறந்த சமையலறைக்கு சிறந்த திசை எது?