முள்ளங்கி சட்னி சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ!

Published : Sep 26, 2024, 06:00 AM IST
முள்ளங்கி சட்னி சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ!

சுருக்கம்

Mullangi Chutney Recipe : இட்லி தோசைக்கு சுவையான முள்ளங்கி சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

தினமும் இட்லி தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் எதாவது சட்னி சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். 

பொதுவாக முள்ளங்கியில் சாம்பார், பொரியல், கூட்டு என்றுதான் வைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதில் சட்னி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இதுவரை சாப்பிட்டவில்லை என்றால் தொடர்ந்து படியுங்கள். இந்த முள்ளங்கி சட்னி சற்று வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையாக இருக்கும் ல். இந்த சட்னி செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும் இட்லி தோசைக்கு இந்த சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு முள்ளங்கியில் சட்னி செய்து கொடுங்கள்  அவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க .. இப்போது இந்த பதிவில் முள்ளங்கி சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க:  நாவூறும் கிராமத்து சின்ன வெங்காய சட்னி.. ரெசிபி இதோ..!

முள்ளங்கி சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

நறுக்கிய முள்ளங்கி - 2 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
மல்லி விதை -  2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
பூண்டு - 2
கடுகு -  1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு

இதையும் படிங்க:  அட.. புளியில் சட்னி கூட செய்யலாம்.. ரெசிபி இதோ!!

செய்முறை :

 முள்ளங்கியில் சட்னி செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடலை பருப்பு, மல்லி விதை, பூண்டுழ் வரமிளகாய்  ஆகிவற்றை போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பிறகு அதில் முள்ளங்கியை சேர்த்து சுமை 2 நிமிடம் வதக்கவும். 

முள்ளங்கி வெந்து விட்டதா என்று வெட்டிப் பாருங்கள். முள்ளங்கி நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, அவற்றை ஒரு தட்டில் தட்டி ஆற வைக்கவும். அவை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் அவற்றை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் தாளித்த இதனை சட்னியில் சேர்த்து கிளறி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி ரெடி. 

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Lemon Kitchen Hacks: ஃபிரிட்ஜ்ல வெச்சாலும் லெமன் காய்ஞ்சு போகுதா? இந்த சிம்பிள் ஹேக் ட்ரை பண்ணுங்க!
Window Condensation: ஜன்னல் ஈரப்பதமாக இருக்கா? ஒரு ஸ்பூன் வைங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்கை!