Mushroom Baby Corn Masala Recipe : காளான் மற்றும் பேபி கார்ன் மசாலா செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தினமும் மதியம் ஒரே மாதிரியான ரெசிபி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அசைவ சுவையில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஆனால், என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கானது தான்.
உங்கள் வீட்டில் காளான் மற்றும் பேபி கார்ன் இருக்கிறதா? அப்படியானால் அவற்றை வைத்து மசாலா செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. எப்படியெனில், காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம் உள்ளது. அதுபோல பேபி கார்னில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, மிகவும் விரைவாக செய்து முடித்து விடலாம். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபி செய்து கொடுங்கள். அடிக்கடி கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் காளான் மற்றும் பேபி கார்ன் மசாலா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: அசைவ சுவையில் காளான் சுக்கா.. ரெசிபி இதோ!!
காளான் மற்றும் பேபி கார்ன் மசாலா செய்ய தேவையான பொருட்கள் :
காளான் - 2 பாக்கெட்
பேபி கார்ன் - 2 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 7 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தக்காளி கெட்சப் - 4 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
சிசுவான் சாஸ் - 4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
வினிகர் - 1 ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு
இதையும் படிங்க: நாவூறும் செட்டிநாடு காளான்... நொடியில் காலியாகிடும்...ரெசிபி இதோ!
செய்முறை :
இந்த ரெசிபி செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை போட்டவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள். பின்னர் ஸ்ப்ரிங் ஆனியனையும் சேர்த்து ஒரு முறை வதக்கிக் கொள்ளுங்கள். இதனை அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்ததாக அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இப்போது இதில் தக்காளி கெட்சப், சோயா சாஸ், சிசுவான் சாஸ் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் மிளகுத்தூள், மஞ்சள் தூள், வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்ததாக அதில் காளான் மற்றும் பேபிகான் சேர்த்து நன்கு கிளறிவிட்டு பிறகு ஒரு தட்டால் மூடி வைக்கவும். சுமார் பத்து நிமிடம் வேக வைக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீரில் சோள மாவு கலந்து அதனை இதனுடன் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை மேலே தூவி விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்ட்டான காளான் மற்றும் பேபி கார்ன் மசாலா தயார். இந்த மசாலாவை நீங்கள் சப்பாத்தி, பூரி மற்றும் சூடான சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் சுவை அஅருமையாக இருக்கும்.
இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D