இனிமேல் தலைக்கு குளிக்க ஷாம்பூ வேண்டாம்- இது இருந்தால் போதும்...!!

By Dinesh TGFirst Published Sep 30, 2022, 7:59 PM IST
Highlights

தலையை சுத்தம் செய்ய ஆண்கள், பெண்கள் என அனைவருமே ஷாம்பூ பயன்படுத்துகிறோம். பிறந்த குழந்தைகளுக்கு கூட தனியாக ஷாம்பூகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. பல்வேறு ரசாயனம் மற்றும் அதனுடைய பயன்பாடு குறித்து தெரியாமல் இருந்தாலும் ஒவ்வொருவரும் அவரவருடைய தேவைக்கு ஏற்றவாறு ஷாம்பூவை பயன்படுத்துகிறோம். முடி வலுவாக இருக்க, பொடுகுத் தொல்லை நீங்க, தூசியை விரட்ட, பேண்களை கொல்ல என்ன வித்தியாச வித்தியாசமான ஷாம்பூக்கள் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால் ஒருசிலருக்கு ராசாயனங்கள் கொண்டு உருவாக்கப்படும் ஷாம்பூக்களை பயன்படுத்துவதற்கு தயக்கம் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களுக்கு ஒரு மாற்றாக நாம் முன்வைக்கப் போகும் பொருள் தான் தயிர். ஆம், பாலில் இருந்து கிடைக்கும் அந்த தயிர் தான் இதுவும். ஷாம்பூவுக்கு பதிலாக தயிரால் கேசத்தை கழுவினால், உங்களுடைய முடி பளபளப்பாகவும், வலுவாகவும் மற்றும் உறுதியாகவும் இருக்கும்.
 

தயிரின் பண்பு

தயிரில் இருக்கும் பண்பின் காரணமாகவே நாம் தலைக்கு அதை பயன்படுத்துகிறோம். அதில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இதனால் உடனடியாக பொடுகு நீங்கிவிடுகிறது. அதை இன்னும் சுலபமாக நீக்கிவிடு, ஒரு சிறிய ஸ்பூன் கடலை மாவு மற்றும் அரை கப் தயிர் கலந்து பேஸ்ட் செய்து மற்றும் தலையில் தேய்த்து குளித்து வாருங்கள். பொடுகு ஓடிப் போய்விடும்.

நீண்ட நாட்கள் சமைக்காமல் வைத்திருந்த உருளைக் கிழங்கை சாப்பிடலாமா?

முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது

தலை முடியை அடர்த்தியாகவும் மற்றும் நன்றாக வளரத்தெடுப்பதற்கு என்றே தனிப்பட்ட ஷாம்பூ வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அந்த தகவல் தொடர்பான உண்மைத் தன்மை இதுவரை எதுவும் நடந்தாக தெரியவில்லை. ஆனால் தயிர் முடிக்கு வலு சேர்ப்பதுடன், அதை நன்றாக வளர்த்தெடுக்கவும் உதவுகிறது. வெறும் தயிரை கூந்தலில் தடவி வந்து, 20 நிமிடங்கள் விட்டு குளித்து வந்தால் பெண்களுக்கு கூந்தல் நன்றாக வளரும். இது பெண்களுக்கு மட்டுமில்லாமல், உறுதியாக முடி இல்லை என்று வருத்தப்படும் ஆண்கள் இருந்தால், தயிரை தடவுங்கள். அது முடி வளர்ச்சியை நிச்சயமாக அதிகரிக்கிறது.

நெய்யுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் மாரடைப்பு குட்பை..!! புற்றுநோய்க்கு பை பை..!!

தலை அரிப்பை விரட்டும்

இந்தியாவில் இருக்கும் நகரங்களில் தூசி, துகள் அதிகளவில் காணப்படுகின்றன. வெளியில் அலைந்து திரியும் வேலை செய்பவர்களுக்கு, இதனால் பெரியளவில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக வானிலை மாறும்போது தலையில் அழுக்கு இருப்பால் அரிப்பு பிரச்னை உருவாகிறது. இப்படி அரிப்பு வந்தால் முதலில் அது உச்சந்தலையை சேதப்படுத்தும். அதையடுத்து முடிக்கு வந்து, தலையில் வளரும் முடியும் வலிமையை முடித்துக்கட்டி விடும். இதை தவிர்க்க அரிப்பு உருவாகும் இடங்களில் தயிர் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவி எடுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் தயிருடன் எலுமிச்சைப் பழத்தையும் கலந்து தடவுங்கள். இது இன்னும் நல்லதை ஏற்படுத்தும்.

Idly : தினசரி குழந்தைகள் இட்லி சாப்பிடுவது நல்லதுதானா?

தயிர் கொண்டு ஹேர் மாஸ்

தயிரை  கூந்தலுக்கு ஹேர் மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம். அதற்கு குளிப்பதற்கு சற்று முன் கூந்தலில் தயிரை தடவி விட்டு 30 நிமிடம் கழித்து தலையை நன்றாக அலசவும். இப்படி செய்தால் கூந்தல் வலுவடைவதோடு, பளபளப்பாகவும் இருக்கும்.

click me!