வீட்டில் மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைக்கும் ஆபத்தா?

Published : Sep 30, 2022, 05:15 PM IST
வீட்டில் மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைக்கும் ஆபத்தா?

சுருக்கம்

உணவுகளை எளிதாக சமைப்பதற்கும், விரைவாக சமையலை முடிக்கவும் மைக்ரோவேவ் ஓவன் பெரும் உதவியாக இருந்து வருகிறது. சிறிது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பொருளை குறிப்பிட்ட சிலர் மட்டுமே வைத்திருந்தனர். ஆனால் இப்போது பலரும் பயன்படுத்தக் கூடிய ஹோம் அப்ளையன்ஸாக மைக்ரோவேவ் ஓவன் மாறியுள்ளது. 

உணவுகளை எளிதாக சமைப்பதற்கும், விரைவாக சமையலை முடிக்கவும் மைக்ரோவேவ் ஓவன் பெரும் உதவியாக இருந்து வருகிறது. சிறிது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பொருளை குறிப்பிட்ட சிலர் மட்டுமே வைத்திருந்தனர். ஆனால் இப்போது பலரும் பயன்படுத்தக் கூடிய ஹோம் அப்ளையன்ஸாக மைக்ரோவேவ் ஓவன் மாறியுள்ளது. 

குறிப்பாக பணிக்கு செல்வோருக்கும், அவசரமாக அன்றைய நாளை தொடங்குபவர்களுக்கும் மைக்ரோவேவ் ஓவன் பெரும் உதவியாக உள்ளது. ஆனால் இதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை உண்டாகுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மைக்ரோவேவ் ஓவனில் தயாரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்றும், அதனால் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பான உண்மைத் தன்மையை விரிவாக இங்கே பார்க்கலாம்.

மின்காந்த அலைகளான கதிர்வீச்சினை கண்களால் பார்க்க முடியாது. அதனால் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் நம்மால் காண இயலாது. மைக்ரோவேவ் ஓவன் தொடர்பாக எண்ணற்ற தகவல்கள் கூறப்படுகிறது. ஆய்வுகளுக்குட்பட்டு சொல்லப்படும் கருத்துக்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். அதன்படி மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகளை விட, அதை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகள் தான் அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உடலுறவின் போது ஆணுறை கிழிந்துவிடுகிறதா? அப்போது இந்த 5 தவறுகளை தவிர்த்திடுங்கள்..!!

சமையலில் இருக்கும் வேலைப் பளூவை குறைப்பதற்காக கண்டுப்பிடிக்கப்பட்டது தான் மைக்ரோவேவ் ஓவன். அதனால் இதை முறையாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். பழுதான அல்லது மிகவும் பழையதாகிய மைக்ரோவேவ் ஓவனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவிலிருக்கும் குழந்தைக்கு தீங்கு ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் ஓவனில் இருந்து ஏதாவது கசிவுகள் இருந்தாலும் ஆபத்து தான். அதிலிருந்து வெளியாகும் சிறிதளவு மின்காந்த அலைகள் கூட குழந்தையை பெரியளவில் பாதிக்கக்கூடும்.

ஓவனை பயன்படுத்தும் போது, அதனுடைய கதவை ஒழுங்காக சாத்த வேண்டும். ஏதேனும் பாகம் உடைந்திருந்தால், கதிர்வீச்சு கசிவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பழுதான பகுதியை உடனடியாக சரிசெய்வது கட்டாயம். ஒருவேளை உங்களுடைய ஓவனில் இருந்து கதிர்வீச்சு கசிந்தால், அது சுமார் 12 செ.மீட்டர் வரை பயணிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழுதான ஓவனை பயன்படுத்துவது எப்போதுமே பிரச்னைதான். அதனால் வெளியில் கூட மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்ப்பது நல்லது.

பெண்கள் மெனோபாஸுக்கு பிறகு விழிப்புடன் இருக்க வேண்டும்- உஷார் சொல்லும் நிபுணர்கள்..!!

நீங்கள் பயன்படுத்தும் மைக்ரோவேவ் ஓவனில் BIS அங்கீகாரம் அல்லது ISI முத்திரை இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். நிறைய ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் ஓவனில் இருந்து கதிர்வீச்சு கசிவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் அதில் சமைப்பதையும், சமைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.  ஓவன் இயக்கத்தில் இருக்கும்போது, அதன் அருகில் செல்ல வேண்டாம். டைமரை செட் செய்துவிட்டு சற்று விலகியே இருங்கள். உணவை சமைத்து முடித்தவுடன், உங்களை அது அழைக்கும். அதைதொடர்ந்து ஓவன் அருகே செல்லுங்கள். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்