நேர்மறையான எண்ணங்களை ஊக்குவிக்கும் மணி பிளாண்டை ஆரோக்கியமாக வளர்க்க எளிய டிப்ஸ்..!

By Dinesh TGFirst Published Sep 30, 2022, 6:24 PM IST
Highlights

வீடுகளை அழகாக மாற்றவும், வீட்டுக்குள் ஆக்சிஜன் வாயுவின் இருப்பை அதிகரிக்கவும் பலரும் பசுமை தாவரங்களை ஆர்வங்களுடன் வளர்த்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் விரும்பி வளர்வது மணி பிளாண்ட் தான். இதை வளர்க்க பெரியளவில் இடவசதி தேவையில்லை. எப்படியும் இதை வளர்த்துவிடலாம். வீட்டுக்குள்ளும் இதை வளர்க்கலாம், வீட்டுக்கு வெளியேயும் வளர்க்கலாம். பூச்சிகள் அடையாது மற்றும் பெரியளவில் செலவையும் இழுக்காது. இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ளதால் பலரும் மணி பிளாண்டுகளை ஆர்வமுடன் வளர்த்து வருகின்றனர்.

வீடுகளை அழகாக மாற்றவும், வீட்டுக்குள் ஆக்சிஜன் வாயுவின் இருப்பை அதிகரிக்கவும் பலரும் பசுமை தாவரங்களை ஆர்வங்களுடன் வளர்த்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் விரும்பி வளர்வது மணி பிளாண்ட் தான். இதை வளர்க்க பெரியளவில் இடவசதி தேவையில்லை. எப்படியும் இதை வளர்த்துவிடலாம். வீட்டுக்குள்ளும் இதை வளர்க்கலாம், வீட்டுக்கு வெளியேயும் வளர்க்கலாம். பூச்சிகள் அடையாது மற்றும் பெரியளவில் செலவையும் இழுக்காது. இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ளதால் பலரும் மணி பிளாண்டுகளை ஆர்வமுடன் வளர்த்து வருகின்றனர். எனினும் அனைவருக்கும் மணி பிளாண்டின் முழுமையான நன்மைகள் தெரியுமா என்பது சந்தேகம் தான். அந்த வகையில் வீட்டை அழகாக்கவும், நேர்மறையான எண்ணங்களை விதைக்கவும் வளர்க்கப்படும் மணி பிளாண்டுகள் குறித்து மேலும் பல நன்மைகளை தெரிந்துகொள்வோம்.

அசைவ உணவை தவிர்க்க எண்ணம் இருந்தும் ஆசை விடவில்லையா? அப்போ இதப்படிங்க மொதல்ல..!!

வீட்டை செல்வ செழிப்புடன் வைக்கும்

மணி பிளாண்ட் என்றால் தமிழில் பணச் செடி என்று பொருள். பெயருக்கு ஏற்றவாறே இந்த தாவரம் செல்வ செழிப்புக்குரிய அடையாளத்துடன் திகழ்கிறது. நாட்டில் பிரபலமான இண்டோர் தாவரமாக இருக்கும் மணி பிளாண்டை வீட்டுக்குள் வைத்தால் நேர்மறையான எண்ணங்கள் உருவாகும் என்று பலரும் நம்புகின்றனர். இது வீட்டில் இருந்தால் நிதி ரீதியாக உருவாகும் சவால்களை எளிதாகவும், நேர்மறையாகவும் எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மணி பிளாண்ட்

பொதுவாக மணி பிளாண்டில் இருந்து ஆக்சிஜன் பெரியளவில் கிடைப்பது கிடையாது. ஆனால் வெளியில் இருந்து வரும் அசுத்தமான காற்றுக்களை வடிகட்டி நல்ல ஆக்சிஜன் வாயுவை மட்டும், இது தக்கவைத்துக் கொள்ளும். அதனால் சுத்தமான காற்றை விரும்புவோர் தங்களுடைய வீடுகளில் உடனடியாக மணி பிளாண்டை வளர்க்க துவங்குங்கள். மேலும் மன அழுத்ததை குறைக்கவும் பல ஆரோக்கிய நன்மைகளை பெருக்கவும் நமக்கு மணி பிளாண்ட் உதவி செய்கிறது.

இந்த இரண்டு பொருட்கள் சேர்ந்தால் போதும்- உயர் கொலஸ்ட்ரால் நோயாளிகள் ஹேப்பி அண்ணாச்சி..!!

மணி பிளாண்டை நன்றாக வளர்த்தெடுக்க எளிய டிப்ஸ்

உங்கள் வீட்டில் மணி பிளாண்டில் வளர்ச்சி குறைவாக காணப்பட்டால், அது வைத்திருக்கும் ஜாடியில் கொஞ்சம் ஆஸ்ப்ரின் மாத்திரையை போட்டு விடுங்கள். அது செடியை நல்ல ஆரோக்கியத்துடன் வளரும். இதனுடைய ஆரோக்கியமான வளர்ச்சிக்கு 15 - 20 நாட்களுக்கு ஒருமுறை மணி பிளான்ட் உள்ள தண்ணீரை மாற்றிக் கொண்டு வருவது நல்லது. சூரிய ஒளிக்கு அருகில் மணி பிளான்ட் வைத்துள்ள கன்டெயினரை வைப்பது செடியை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

click me!