Urulaikilangu Biryani Recipe : குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கில் பிரியாணி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரியாணி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். பிரியாணி என்ற பெயரை கேட்டாலே நம்மில் பலரது நாவில் எச்சில் ஊறும். சொல்லபோனால், மூன்று வேளையும் பிரியாணி கொடுத்தால் கூட வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுபவர்களும் உண்டு. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பீஃப் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, பன்னீர் பிரியாணி, சோயா பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி என பிரியாணி பல வகைகள் உண்டு.
அந்த வகையில், இன்றைய பதிவில் உங்களுக்காக உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி என்று சொல்லப் போகிறோம். என்ன உருளைக்கிழங்கில் பிரியாணியா என்று யோசிக்கிறீங்களா? இந்த உருளைக்கிழங்கு பிரியாணி சாப்பிடுவதற்கு சற்று வித்தியாசமான சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த பிரியாணி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, மிகவும் எளிமையான முறையில் செய்து விடலாம்.
undefined
முக்கியமாக, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கில், இப்படி ஒருமுறை பிரியாணி செய்து கொடுங்கள், அவர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை நீங்கள் மதியம் லஞ்ச் பாக்ஸில் கூட அடித்துக் கொடுக்கலாம். பேச்சுலர்கள் கூட இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பாலக்கீரை பிரியாணி சாப்பிடலைன்னா ஒருமுறை ட்ரை பண்ணுங்க.. செமையா இருக்கும்!
உருளைக்கிழங்கு பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
அன்னாச்சி பூ - 1
பிரியாணி இலை - 1
கரம் மசாலா - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
புதினா இலை - சிறிதளவு
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
இதையும் படிங்க: அசத்தலான சுவையில் மீல்மேக்கர் பிரியாணி!!
செய்முறை :
உருளைக்கிழங்கு பிரியாணி செய்ய முதலில், எடுத்து வைத்த அரிசியை நன்றாக கழுவி, சுமார் 10 நிமிடம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உருளைக்கிழங்கில் தோல் நீக்கி சதுரமாக வெட்டிக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடாக்கவும். அவை நன்றாக சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், அன்னாச்சி பூ ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அதில் வெட்டி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இப்போது அதில் கரம் மசாலா தூள், நறுகிய கொத்தமல்லி, புதினா இலை ஆகியவற்றை போட்டு ஒருமுறை வதக்கவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன், அதில் அரிசியை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் மணக்க மணக்க ருசியான உருளைக்கிழங்கு பிரியாணி ரெடி. இந்த உருளைக்கிழங்கு பிரியாணியுடன் நீங்கள் ரைத்தா உடன் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D