இதுவரை நீங்க கறிவேப்பிலை குழம்பு சாப்டலனா.. உடனே செஞ்சி சாப்பிடுங்க!

Published : Sep 12, 2024, 03:21 PM ISTUpdated : Sep 12, 2024, 03:24 PM IST
இதுவரை நீங்க கறிவேப்பிலை குழம்பு சாப்டலனா.. உடனே செஞ்சி சாப்பிடுங்க!

சுருக்கம்

Karuveppilai Kulambu Recipe : இந்த பதிவில் கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

மதியம் சூடான சாதத்திற்கு ஏதாவது வித்தியாசமான சுவையில் சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் காரசாரமாக கூடவே ஆரோக்கியமாக. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காக தான்.உங்கள் வீட்டில் கறிவேப்பிலை இருக்கிறதா? அப்படியானால் அதில் சுவையான குழம்பு செய்து சாப்பிடுங்கள். பொதுவாகவே கருவேப்பிலையில் நாம் சட்னி, துவையல் வைத்து தான் அதிகம் சாப்பிடுவோம்.

ஒருவேளை நீங்கள் இதுவரை கறிவேப்பிலை குழம்பு சாப்பிடவில்லை என்றால், கண்டிப்பாக செய்து சாப்பிடுங்கள். கறிவேப்பிலையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஒருமுறை இந்த குழம்பை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். கறிவேப்பிலை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு அதிக நேரம் இருக்காது சீக்கிரமே செய்துவிடலாம். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  கறிக்குழம்பு மிஞ்சும் சுவையில் வேர்க்கடலை குழம்பு.. ரெசிபி இதோ!

குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :

கருவேப்பிலை - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
புளி - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு

இதையும் படிங்க:  வெறும் 10 நிமிடத்தில் ருசியான வெண்டைக்காய் மோர் குழம்பு.. ரெசிபி இதோ!

செய்முறை :

கறிவேப்பிலை குழம்பு செய்ய முதலில் எடுத்து வைத்த கறிவேப்பிலையை தண்ணீரில் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் வர மிளகாய், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் கருவேப்பிலை மற்றும் வதைக்க பொருட்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் புளி சாற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு மறுபடியும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளிக்கவும் பிறகு கரைத்து வைத்துள்ள மசாலா கரைசலை இதனுடன் சேர்த்து நன்கு கொடுக்க விடவும். இறுதியாக பொடியாக நெருக்கி வைத்த கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Tips : குளிர்காலத்தில் சளி அடிக்கடி வருதா? இந்த உணவுகளை உடனே ஒதுக்கிவிடுங்க
Thyroid Belly : தைராய்டால் வந்த அதிக எடை, 'தொப்பை' அற்புத மூலிகை பானம்! எப்படி தயார் செய்யனும்?