Spicy Cabbage Rice Recipe : இந்த பதிவில் காரசாரமான சுவையில் முட்டைக்கோஸ் ரைஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தினமும் மதியம் ஒரே மாதிரியான சாப்பாடு சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் எதாவது வெரைட்டி ரைஸ் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதுவும் காரசாரமாக அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
உங்களுக்கு முட்டைகோஸ் பிடிக்குமா? அப்படியானால் அதில் காரசாரமான சுவையில் சூப்பராக வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடுங்கள். இந்த வெரைட்டி ரைஸ் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த முட்டைக்கோஸ் ரைஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, மிகவும் சுலபமான முறையில் செய்துவிடலாம்.
undefined
மேலும், இந்த வெரைட்டி ரைஸ் நீங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் உணவாக டிபன் பாக்ஸில் அடைத்து கொடுத்தால், அவர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை இந்த வெரைட்டி ரைஸ் ரெசிபியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் காரசாரமான சுவையில் முட்டைக்கோஸ் ரைஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பிரியாணியே தோற்றுப் போகும் சுவையில் புதினா ரைஸ்.!!
ஸ்பைசி முட்டைக்கோஸ் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
முட்டைகோஸ் - 1 கப் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1(நீளமாக நறுக்கியது)
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: 10 நிமிடத்தில் சுவையான கேரட் சாதம் இப்படி செய்ங்க.. செமையா இருக்கும்!
செய்முறை :
ஸ்பைசி முட்டைகோஸ் சாதம் செய்ய முதலில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கவும். உங்களுக்கு நெய் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு அதில் சீரகம் போட்டு தாளிக்கவும் அதன் பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் அடுத்து பிறகு அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள் அடுத்து அதில் முட்டை கோஸ், மஞ்சள் தூள், சாம்பார் தூள், மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். முட்டைக்கோஸ் நன்கு வதங்கியதும், அதில் எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் அப்படியே மூடி வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான காரமான முட்டைக்கோஸ் ரைஸ் ரெடி. இந்த ரைஸ் உடன் நீங்கள் விரும்பினால் ரைத்தா அல்லது உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D