Vendakkai Sambar Recipe : ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள வெண்டைக்காயில் சுவையான சாம்பார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்று மதியம் உங்கள் வீட்டில் சாம்பார் செய்யப் போறீங்கள் என்றால், எப்போதும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக செய்யுங்கள். ஆனால், அப்படி என்ன செய்வது என்று தெரியவில்லையா? இந்த பதிவு உங்களுக்கானது தான்.
வீட்டில் வெண்டைக்காய் இருக்கிறதா? அப்படியானால் அதை வைத்து சூப்பரான சாம்பார் செய்யுங்கள். பொதுவாகவே, நீங்கள் வெண்டைக்காயில் புளி குழம்பு, கூட்டு, பொரியல் என்று தான் சாப்பிட்டிருப்பீர்கள் என்றால், ஒரு முறை அதில் சாம்பார் வைத்து சாப்பிடுங்கள். மிகவும் அருமையாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அதன் சுவை இருக்கும். முக்கியமாக பேச்சிலர்ஸ் கூட இந்த சாம்பார் வைத்து சாப்பிடலாம். அந்த அளவிற்கு இந்த ரெசிபி செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
வெண்டைக்காய் நன்மைகள் :
வெண்டைக்காய் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக, இதனால் செரிமான அமைப்பு மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும், கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. உடல் எடை மற்றும் ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்தும். முக்கியமாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ரொம்பவே நல்லது மற்றும் சிறுநீரக பிரச்சனையையும் தடுக்கும்.
இப்படி எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டுள்ள வெண்டைக்காயில், சுவையான சாம்பார் செய்வது எப்படி என்று இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 2 தக்காளி போதும் டேஸ்டான சாம்பார் ரெடி.. ஒருமுறை செஞ்சு பாருங்க திரும்பத் திரும்ப செய்வீங்க!
வெண்டைக்காய் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1/2 கப்
வெண்டைக்காய் - 15
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
சாம்பார் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
புளிசாறு - சிறிதளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8 (நறுக்கியது)
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: பேச்சிலர் சமையல் : 15 நிமிடத்தில் சுவையான வெங்காய சாம்பார்.. ரெசிபி இதோ!
செய்முறை :
வெண்டைக்காய் சாம்பார் செய்ய முதலில் எடுத்து வைத்த வெண்டைக்காயை தண்ணீரில் நன்கு கழுவி, அதை ஒரு துணியால் துடைத்து, பிறகு அதன் முனையை வெட்டி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்த வெண்டைக்காயை போட்டு, அதன் பிசுபிசுப்பு தன்மை நீங்கும் வரை நன்கு வதக்கி, பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் கழுவி வைத்த துவரம் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்,து குக்கரை சுமர் 5 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போன பிற,கு குக்கர் மூடியை திறந்து பருப்பை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் ஏற்கனவே வதக்கி வைத்த வெண்டைக்காய், சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போட்டு சுமார் 2 நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதில் வேக வைத்து எடுத்த துவரம் பருப்பை சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்துக் நன்றாக கொதிக்க வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்ததும் அதில் புளி சாற்றை ஊற்றி மீண்டும் ஒருமுறை கொதிக்க வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி விடுங்கள். அவ்வளவுதான் ருசியான வெண்டைக்காய் சாம்பார் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D