தமிழர்களின் பாரம்பரிய தைப்பொங்கல் திருநாள்

By vinoth kumarFirst Published Jan 14, 2021, 11:06 PM IST
Highlights

பொங்கல் என்பது தமிழர்கள் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய பண்டிகையாகும். இந்த பொங்கலானது ஒவ்வொரு வருடத்தின் (ஜனவரி 14) தை முதல் நாளை  நாம் கொண்டாடுகிறோம். 

பொங்கல் என்பது தமிழர்கள் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய பண்டிகையாகும். இந்த பொங்கலானது ஒவ்வொரு வருடத்தின் (ஜனவரி 14) தை முதல் நாளை  நாம் கொண்டாடுகிறோம். இந்த பண்டிகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களான தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

இந்த பண்டிகைக்கான மிக முக்கிய காரணம் உழைக்கும் மக்களுக்கான பண்டிகையாகவும்,இயற்கை தெய்வமான சூரியனை வழிபடுவதற்கும், மற்ற உயிரினங்களுக்கு நன்றி சொல்வதற்காகவும் நாம் இந்த பண்டிகையை கொண்டாடுகிறோம். ஆடி மாதத்தில் விதைத்த நல்ல விதைகள், வளர்ந்து அதன் முழு பலன்களை அடையக் கூடிய பருவம் அதாவது அறுவடை செய்யக் கூடிய பருவம் தான் தை மாதம் பயிர்கள் விளைய உதவியாக இருந்த இயற்கையை அதாவது கதிரவன், நிலம், பசுக்கள், கலப்பை, இவற்றிற்கு நன்றி சொல்வதற்காக நாம் கொண்டாடும் பண்டிகைதான் பொங்கல்.

அறுவடையில் கிடைத்த புது அரிசியை, வெல்லம், பால், நெய் சேர்த்து புது பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைக்கும் மிக உன்னத நாளாகும். இந்நாளில் தமிழர்களின் ஒழுக்கம், நாகரிகம், கலாச்சாரத்தை போற்றும் வகையில் கொண்டாடும் சிறப்புமிக்க திருநாளாகும். இந்த பண்டிகையானது இலக்கியகாலத்தில் இந்திரவிழா என்று கொண்டாடினர். ஒரு வாரத்திற்கு முன்பே வீட்டை சுத்தம் செய்து,புத்தாடைகள் எடுத்துவைத்து வீட்டிற்கு வண்ண வண்ண சாயமிட்டு, வீட்டின் அணைத்து சுற்றுப்பகுதியிலும் மாவிலை,வேப்பிலை,பூலாப்பூ,என அனைத்தையும் அலங்கரித்து வீட்டிற்கு முன்னாடி பலவண்ண கோலமிட்டு பார்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

பொங்கலன்று தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, மாமன் மகள்,அத்தை மகன், நண்பர்கள், உற்றார் உறவினர் என அனைவருமே புத்தாடை அணிந்துகொண்டு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி பொங்க பேசும் அந்த தை திருநாளில் நாம் காணும்போது அந்த இயற்கையின் மதிப்பே அப்பொழுதான் தெரியும்.

காலையில் எழுந்து கால்நடைகளை ஓட்டிக்கொண்டு மேச்சலுக்கு விட்டு, அதை தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட்டு,பலூன், சாயத்தால் கால்நடைகளை அலங்கரித்துவிட்டு மாலையில் பட்டியில் அடைத்துவிட்டு, மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு,கூரான கொம்பில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். அன்றைய பொழுதில் வாணவேடிக்கையாக இருக்கும்.

பொங்கலுக்காக ஊரில் மண்பாண்டங்கள்,தேங்காய்,பூசணிக்காய்,வாழைப்பழம்,பூக்கள்,கற்பூரம்,வெற்றிலைபாக்கு,வெல்லம், கரும்பு, மஞ்சள் செடி, என கடைவீதிகளில் குவிந்துகாணப்படும். அன்றையபொழுதில் அனைவரும் ஒன்றுகூடி நமக்கு உணவளித்த  இயற்கை தெய்வங்களுக்காக வழிபடுவார்கள். அன்றைய பொழுதில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள்தான் அணிந்து கொண்டிருப்பார்கள் இந்த பொங்கல் முடிந்தவுடனே அடுத்த பொங்கல் எப்போ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

click me!