பொங்கல் என்றால் என்ன?

By vinoth kumar  |  First Published Jan 14, 2021, 10:58 PM IST

தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையில் ஒன்று. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும்; தமிழ்நாடு,இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மிக சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். 


தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையில் ஒன்று. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும்; தமிழ்நாடு,இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மிக சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரிய பகவானுக்கும்,மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றி அறிதலையே பொங்கலில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விவசாயிகளின் செல்ல பண்டிகை. அவர்கள் அறுவடை செய்து  நெல்லை அறைத்து, அரிசி எடுத்து,பால்,நெய் சேர்த்து; பானையிலிட்டு அடுப்பில் கொதிக்க வைத்து, பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு, இன்பம் அடையும் விழாவே பொங்கல் திருநாளாகும்.

பொங்கலை எவ்வாறு கொண்டாடுகிறோம்?  

Tap to resize

Latest Videos

உறவினர்கள்,நண்பர்கள், அனைவரையும் வரவழைத்து விளையாட்டு போட்டிகள் வைத்து அன்று மிக மிக மகிழ்வான தருணங்களாக இருக்கும்.
குறிப்பாக கபடி,வழுக்கு மரம்,பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள்.
இரவு நேரங்களில் ஆடல் பாடல் என ஊரே கொண்டாட்டத்தின் உச்சியில் இருப்பார்கள்.  

பொங்கல் வகைகள்

தமிழர்களின் மிகமுக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. நான்கு நாட்கள் வரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை:
1.போகி பொங்கல்  
2.தைப்பொங்கல்
3.மாட்டுப்பொங்கல்
4.காணும் பொங்கல்

1.போகி பொங்கல்

நம் வீட்டில் உள்ள பழையவற்றை போக்கி, வீட்டை தூய்மை படுத்துவதே போகி பண்டிகை. இது பொங்கல் பண்டிகையின் முதல் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 29-ம் தேதி போகி கொண்டாடப்படுகிறது.    
         
2.தைப்பொங்கல்

புது பானையில் புதிய அரிசியை இட்டு பொங்கல் இடுவர். நெல் விளைய காரணமாக இருந்த கதிரவனுக்கு படைப்பர்.தைப்பொங்கல் தமிழரின் தனிப்பெரும் விழா.ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.  

3.மாட்டுப்பொங்கல்.  

மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள்.இந்நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சில இடங்களில் வீர் விளையாட்டாக நடைபெறும்.ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.  

4.காணும் பொங்கல்

நான்காம் நாள் காணும் பொங்கலாகும். இந்நாளில் நண்பர்களும் உறவினர்களும் ஒருவரை ஒருவர் காணும் நாளாகும்.ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 

click me!