நிவர், புரேவி புயல்களை அடுத்து மூன்றாவதாக புதிதாக உருவாகியுள்ள புயலானது இரட்டை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர், புரேவி புயல்களை அடுத்து மூன்றாவதாக புதிதாக உருவாகியுள்ள புயலானது இரட்டை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புரெவி புயலை அடுத்து வருகிற டிசம்பர்-7ம் தேதி புதிதாக ஒரு புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புரெவி புயல் காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கெனவே நிவர் புயல், புரெவி புயல் என தமிழகத்தில் மையம் கொண்ட நிலையில் மேலும் ஒரு புயல் டிசம்பர் 7ஆம் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், “தற்போது கிடைத்துள்ள சாட்டிலைட் காணொளியில் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே புதிதாக உருவாகும் அந்த புயல் இரட்டை புயலாக மாறுவது போன்று காட்சி அளித்துள்ளது.
மேலும், இது குறித்து தற்போது வரை உறுதியான தகவல் கூற முடியாது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவதாக வரக்கூடிய புயலிலும் மக்கள் தங்களை தற்காத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க அரசு தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.